ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்!

‘தண்டனைகளின் நோக்கம் சமூக பயத்தை ஏற்படுத்துவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல. கடந்த பத்து நாட்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் ’ என மனித உரிமைகள் அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2023, 02:44 PM IST
  • ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகம்.
  • 2023ல் இதுவரை 194 பேர் தூக்கிலிடப்பட்டதாக என தகவல்.
  • ஈரான் நாட்டில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்! title=

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் கடுமையான முறையில் பின்பற்றப்படுகின்றன. அங்கே வழங்கப்படும் தண்டனைகளும் மிகவும் கொடூரமானவை.  இந்நிலையில், ஈரான் தொடர்பாக மனித உரிமைகள் குழு ஒன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் மனித உரிமைகள் (IHR) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் கடந்த பத்து நாட்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என கூறப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.  2018 இல் இராணுவ அணிவகுப்பில் மக்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வீடன் -ஈரானிய மனிதரான ஹபீப் ஃபராஜுல்லா சாப் என்பவரை, ஈரான் தூக்கிலிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த புதிய அறிக்கை வந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் 42 பேர் தூக்கிலிடப்பட்டனர்

கடந்த 10 நாட்களில், 42 க்கும் மேற்பட்டோர் தூக்கிடப்பட்டனர் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றனர். அவர்களில் பாதி சிறுபான்மை பலூச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஈரானிய அதிகாரிகளால் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

2023ல் இதுவரை 194 பேர் தூக்கிலிடப்பட்டதாக என தகவல்

ஈரான் மனித உரிமைகளின் படி, ஈரான் 2023ல் இதுவரை 194 பேருக்கும் அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு மரண தண்டனைகள் மட்டுமே அதிகாரிகளால் முறையாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மரணதண்டனைகள் போதைப்பொருள் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

'சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கிறது'

IHR தலைவர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் இது குறுத்து கூறுகையில், "தண்டனைகளின் நோக்கம் சமூக அச்சத்தை உருவாக்குவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல." அவர் கூறினார், "கடந்த பத்து நாட்களில் இஸ்லாமிய குடியரசு ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு நபரை தூக்கிலிட்டுள்ளது, அதே நேரத்தில் சர்வதேச சமூகம் சமூகம் கண்டிக்காமல் அமைதியாக இருக்கிறது' எனக் கூறினார்.

மேலும் படிக்க | விவாகரத்தை கொண்டாடியது ஒரு குற்றமா! விவாகரத்து கொண்டாட்டம் வினையான சோகம்!

2022 ஆம் ஆண்டில் ஈரானில் மரணதண்டனை 

ஈரான் மனித உரிமை அமைப்பு (IHR), பிரான்சின் டுகெதர் அகென்ஸ்ட் தி டெத் பெனால்டி (ECPM) உடன் இணைந்து வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் ஈரானில் மரணதண்டனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதற்காக குறைந்தது 582 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்றும் கூறுகிறது.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள்! 

ரகசியமாக நிறைவேற்றப்படும் தண்டனை

2022 ஆம் ஆண்டில் இவற்றில் 71 மட்டுமே கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் காட்டுகின்றன. மீதமுள்ளவை 'அறிவிக்கப்படாமல்' மற்றும் 'ரகசியமாக' செய்யப்பட்டன  என குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளால் தெரிவிக்கப்பட்டது. "எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மரண தண்டனைக்கான சர்வதேச எதிர்வினைகள் இஸ்லாமிய குடியரசிற்கு அவர்களின் மரணதண்டனைகளை முன்னெடுப்பதை கடினமாக்கியுள்ளன" என்று மஹ்மூத் கூறினார்.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகம். முன்னதாக, இரு மாதங்களுக்கு முன் ஈரான் நாட்டில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பெற்றோர்களே மாணவிகளுக்கு விஷம் கொடுத்திருப்பதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கும். பெண்களின் கல்வியை முடக்கும் நோக்கத்துடன்  இவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் பெற்றோர்கள்.

மேலும், கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியாமல் இருந்ததாக கூறி 22 வயது இளம்பெண்ணான மாஷா அமினி மீது அந்நாட்டின் கலாச்சார காவலர்கள் தாக்குதல் நடத்தினர். உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அங்கு அடித்து கொல்லப்பட்டார்.  இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அந்த நாட்டிலும் உலகிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News