Video : விமானப் பணிப்பெண்ணின் விரலை கடித்த போதை ஆசாமி!

விமானப் பயணி ஒருவர் போதையில் அங்கிருந்த பணிப்பெண் ஒருவரின் விரலை கடித்துள்ளார், இதைதொடர்ந்து நடைபெற்ற கைகலப்பின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2022, 09:56 PM IST
  • இச்சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.
  • இஸ்தான்புல் - ஜகார்த்தாவிற்கு அந்த விமானம் சென்றது.
  • விமானம் உடனடியாக மலேசியாவில் தரையிறக்கப்பட்டது.
Video : விமானப் பணிப்பெண்ணின் விரலை கடித்த போதை ஆசாமி! title=

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்றுகொண்டிருந்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை இருந்த பயணியால் பெரும் கலவரமே ஏற்பட்டது. போதையில் இருந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்களுடன் சண்டையிட்டதால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து ,ஜகார்த்தாவுக்குச் சென்ற விமானத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | அழகியுடன் உல்லாசம்... தனது 'ஆபாச' வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி!

தற்போது, அந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், போதையில் இருந்த பயணி, விமானப் பணியாளரை தாக்குகிறார். அந்த பணியாளர் தனது கையில் பயணியை பிடிக்க கைவிலங்கு ஒன்றை வைத்திருந்தார். 

பயணி தன்னை தாக்கியவுடன், விமானப் பணியாளர் அந்த பயணியையும் எதிர்த்து தாக்கியதால் சூழல் விபரீதமாகியுள்ளது. இதனால், இருவரையும், சக பயணிகளும், வேறு விமானப் பணியாளர்களும் தடுக்க முயன்றனர்.

தொடர்ந்து, ஜகர்த்தாவுக்கு செல்ல சில மணிநேரங்கள் இருந்த போதிலும், உடனடியாக விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்டது. 

குடிபோதையில் விமானத்தில் சண்டைப்போட்டவர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் வேறொரு விமானத்தின் பைலட் என்றும் தெரியவந்தது. அவர் போதையில் விமானப் பணிப்பெண்ணின் விரலை கடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விமானத்தில் சத்தம்போட்ட அவர் அமைதியாக இருக்கையில் அமரும்படி பணிப்பெண்கள் பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால், கோபமடைந்த அந்த நபர் பணிப்பெண்ணின் விரலை கடித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகே, விமான பணியாளர்களுக்கும் அவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | எலிக்குள் மனித மூளை! புதிய அறிவியல் சாதனை படைத்த விஞ்ஞானிகள்! குரங்கு... மனிதன்... எலி??

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News