பழைய காதலை பட்டென மறக்க உதவும் 5 பயிற்சிகள்! ட்ரை பண்ணுங்க..

How To Move On From Past Love : நம்மில் பலருக்கு, நம்முடைய பழைய காதலை மறந்து, புதிதாக ஒரு கதையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2024, 04:43 PM IST
  • பழைய காதலில் இருந்து மூவ் ஆன் ஆக...
  • பிரேக் அப்பை மறப்பது எப்படி?
  • இதோ சில டிப்ஸ்!
பழைய காதலை பட்டென மறக்க உதவும் 5 பயிற்சிகள்! ட்ரை பண்ணுங்க.. title=

How To Move On From Past Love : காதல் மொழி, உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான மொழியாகும். இந்த உறவில் இருந்து விட்டு பின்னர் அதில் இருந்து விலகுவது என்பது பலருக்கு சவாலானதாக இருக்கும். இந்த வித்தியாசமான இதயத்தை நொறுக்கும் வகையிலான உணர்வை வேறு யாரிடமும் சொல்லவும் முடியாது. காதல் முறிவு ஏற்பட்டு பல ஆண்டுகளான பிறகும் சிலரால் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும். இங்கு பார்க்க போகும் சில பயிற்சிகளால் அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்யலாம். அவை என்ன தெரியுமா? 

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்: 

எந்த உணர்வையும் அது யாருடைய உணர்வாக இருப்பினும் அதற்கு நான் மதிப்பு கொடுத்து வாழ வேண்டும். நம்முடைய உணர்வாக இருந்தாலும் சரி. முடிந்து போன உரையில் உங்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு இருந்தாலும், கோபம், சோகம், குற்ற உணர்ச்சி என எது இருந்தாலும், அந்த உணர்வுகளை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி செய்யாமல், அதை மனதின் மூலையில் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தால், ஒரு நாள் அல்லது ஒரு நாள் அது முழுமையாக உங்கள் முகத்தில் பீரிட்டு அடித்து விடும். அது மட்டுமன்றி, அந்த மனமுறிவில் இருந்து நீங்கள் மீண்டு வருவதற்கு அது உதவாது. எனவே, எப்போதும் உங்கள் உணர்வுகளை சிறுமைப்படுத்தாமல், அதை முழுமையாக உணருங்கள்.

வேறு கோணத்தில் இருந்து பார்ப்பது:

ஒரு காதல் உறவு அல்லது மனதிற்குள் இருக்கும் காதல் முடியும் போது, கண்டிப்பாக மனம் பாரமாகத்தான் உதவும். அந்த உறவு முடிந்ததற்கு காரணம் யார்? ஏன் இப்படி நடந்தது? ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? போன்று எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல், அந்த உறவின் முடிவில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை பாருங்கள். அந்த அனுபவத்தில் இருந்து உங்களுக்கு கிடைத்தது என்ன, இதனால் நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக மாறியிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல்:

எப்போதும் பழையதை பற்றியே யோசித்துக்கொண்டிருக்க, அவர்களை பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்க மனம் விரும்பும். ஆனால், அது இனி உங்கள் வருங்காலத்திற்கு உதவாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பித்து விடுங்கள். அப்படி பழையதை பற்றி நீங்கல் யோசிக்கும் போது, ஒரு நிமிடம் அதை அப்படியே நிறுத்திவிட்டு உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களை பாருங்கள். உங்களை சுற்றி இருக்கும் நிறங்கள் என்னென்ன என்று பாருங்கள். இது, உங்களை அதிகமாக யோசிப்பதில் இருந்து நிறுத்தும். 

மேலும் படிக்க | புது காதலர்கள், புதுமண ஜோடி அவசியம் இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க - சண்டையே வராது

தூண்டுதல்களை குறைத்துக்கொள்ளுங்கள்: 

உங்களது காதல் முறிவை அல்லது காதலை நினைவுப்படுத்தும் இடங்களுக்கோ அல்லது தொடர்புடைய நபரையோ சந்திப்பதை நிறுத்துங்கள். அவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்வதையும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நோட்டமிடுவதையும் நிறுத்துங்கள். அவர்கள் உங்களின் வாழ்க்கையில் இல்லை என்பதை தெரிந்துக்கொண்டு, உங்கள் மனதை ஆற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். 

உறவின் முடிவு:

ஒரு சிலருக்கு, தங்கள் உறவு முடிந்த பிறகும், அது முடிவு பெறாதது போலவும், எதோ ஒரு சண்டை போலவும் இருக்கும். அந்த உறவு முடிவதற்கு சரியான காரணம் கொடுக்கப்படாதது போலவும் இருக்கும். எனவே, முடிந்தால், உங்கள் exஉடன் கடைசியாக ஒரு முறை பேசலாம், ஒரு கடிதம் எழுதலாம். அப்படி முடியவில்லை என்றால், நடந்தது நடந்து விட்டது எனும் மன நிலைக்கு வந்துவிட்டு, பழையதை கழிப்பதற்கு வழியை பார்க்க வேண்டும். வேண்டுமானால் அவருக்கென்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதனை கிழித்து போடலாம் அல்லது எரித்து விடலாம். 

மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News