பாத்ரூமில் உட்கார்ந்து செல்போன் பார்ப்பதால் 5 மிகப்பெரிய பிரச்சனைகள்..!

Lifestyle Tips Tamil | பாத்ரூமில் உட்கார்ந்து செல்போன்கள் அதிக நேரம் உபயோகிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2024, 06:14 PM IST
  • பாத்ரூமில் மொபைல் போன் வேண்டாம்
  • உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து
  • பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும்
பாத்ரூமில் உட்கார்ந்து செல்போன் பார்ப்பதால் 5 மிகப்பெரிய பிரச்சனைகள்..! title=

Bathroom, Lifestyle Tips Tamil | இப்போதெல்லாம் ஸ்மார்ட்போனின் உபயோகம் அதிகமாகிவிட்டதால், எல்லா இடங்களிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். கழிப்பறையில் கூட செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. இருப்பினும் கழிவறையில் போனை பயன்படுத்தும் பழக்கம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிப்பறையில் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

பாக்டீரியா ஆபத்து

மருத்துவர்கள் சொல்வதன்படி, கழிப்பறை பாக்டீரியா மற்றும் கிருமிகள் குவிந்து கிடக்கும் இடம். டாய்லெட் சீட், ஃப்ளஷ் பட்டன்கள் மற்றும் குழாய்களில் பல வகையான பாக்டீரியாக்கள் இருக்கும். நீங்கள் கழிப்பறையில் போனைப் பயன்படுத்தும்போது உங்கள் கண்களால் பார்க்க முடியாத பாக்டீரியாக்களால் உங்கள் தொலைபேசி மீதும் தொற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாக, கிருமிகள் உங்கள் உடலில் நுழைந்து, பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

உடலில் நுழையும் பாக்டீரியா

நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது, உங்கள் கைகளைக் கழுவுவதை வழக்கமாகக் கழுவி விடுவீர்கள். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல உங்கள் தொலைபேசியில் இருக்கும் பாக்டீரியா அப்படியே இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கருத்தில் கொள்வதே இல்லை. கழிப்பறையில் போனைப் பயன்படுத்திய பிறகு, அதைக் கையில் பிடித்து பயன்படுத்தும்போது பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் எளிதாக நுழைந்துவிடும்.

மலச்சிக்கல் ஆபத்து

அதனால், நீண்ட நேரம் கழிப்பறையில் போனை பயன்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். பொதுவாக மக்கள் 30 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருப்பதால் பைல்ஸ் பிரச்சனையும் ஏற்படும். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உடலில் வேறு பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க | 1 வாரத்தில் சரும ஆரோக்கியம் மேம்பட இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்

தசை மற்றும் மூட்டு வலி

நீண்ட நேரம் கழிப்பறையில் போன்களை பயன்படுத்துவதால் தசை மற்றும் மூட்டு வலி ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடலில் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்காது. இதனால் தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.

மன அழுத்தம்

கழிப்பறையில் போனைப் பயன்படுத்துவதால் மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் ஏற்படும். நீங்கள் அதிக நேரம் அலைபேசியில் பிஸியாக இருந்தால், அது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இரவில் தூங்குவதையும் கடினமாக்கலாம். இது உங்கள் தூக்க சுழற்சியைத் தொந்தரவு செய்யலாம், இது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கழிப்பறையில் தொலைபேசிகளை தவிர்க்கவும்

இதனால் தான் கழிப்பறையில் போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு உங்களை அறியாமலேயே பல ஆபத்துகளை கொண்டு வந்துவிடுகிறது. கழிப்பறையில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். உங்கள் போனை குறைவாக பயன்படுத்தவும். ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். சுவர் இல்லையென்றால் எப்படி சித்திரம் வரையமுடியாதோ, அதனைப் போல் ஆரோக்கியம் இல்லை என்றால் நிம்மதியாக வாழ முடியாது. 

மேலும் படிக்க | சருமத்தை சாப்ட்டாக, பளபளப்பாக வைக்கணுமா... இந்த 5 ஜூஸ்களை குடிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News