ஹெச்-1பி விளைவு: 10000 அமெரிக்கர்களுக்கு வேலை தர இன்ஃபோஸிஸ் முடிவு

Last Updated : May 2, 2017, 12:34 PM IST
ஹெச்-1பி விளைவு: 10000 அமெரிக்கர்களுக்கு வேலை தர இன்ஃபோஸிஸ் முடிவு title=

இன்ஃபோஸிஸ் நிறுவனம், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 10000 அமெரிக்க மக்களுக்கு வேலை வழங்கப் போவதாகக் கூறி உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ஹெச்-1பி விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறையில் கடுமையான திருத்தம் கொண்டுவந்துள்ளார். 

இதனால், அமெரிக்காவில் இயங்கும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள், பாதிப்பை சந்தித்துள்ளன. டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு காரணமாக, இந்நிறுவனங்கள் தற்போது புதிதாக ஆள் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. 

இந்நிலையில், இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ், அதன் அமெரிக்க சந்தையை கருத்தில்கொண்டு, புதிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறியுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில், அமெரிக்காவின் சில இடங்களில் 4 அலுவலகங்களை தொடங்க உள்ளதாகவும், இதன்மூலமாக, 10000 அமெரிக்க மக்களுக்கு வேலை வழங்க உள்ளதாகவும் இன்ஃபோஸிஸ் தெரிவித்துள்ளது.

இத்தகவலை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், முதலில் இண்டியானா பகுதியில் தங்களது முதல் அலுவலகம் தொடங்கப்படும் என்றும், இங்கு 2021ம் ஆண்டுக்குள்ளாக, 2 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Trending News