இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல்-ஹமாஸ் போரின் 15வது நாள் இன்று. கத்தாரின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஹமாஸ் இரண்டு அமெரிக்க குடிமக்களை விடுவித்தது. போர் தொடங்கிய பின்னர் பணயக்கைதி ஒருவர் விடுவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இருப்பினும், 200 பேர் இன்னும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளனர். ஹமாஸ் இரண்டு பெண்களையும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது, அதன் பிறகு செஞ்சிலுவைச் சங்கம் அவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
நன்றி கூறிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டனர். இதுக்குறித்த தகவலை நேற்று (அக்டோபர் 20, வெள்ளிக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். மேலும் இரு குடிமக்களும் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்யவும், இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள உதவுவதற்கும் தனது அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். பிணைக் கைதியாக இருந்த ஒரு அமெரிக்கப் பெண் மற்றும் அவரது டீனேஜ் மகளை விடுவிப்பதில் ஒத்துழைத்த கத்தார் மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடிமக்களை மீட்டோம் -அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். "அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரமான பயங்கரவாத தாக்குதலின் போது ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க குடிமக்களை இன்று நாங்கள் மீட்டோம் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவு கிடைக்கும்
தனது அறிக்கையில், "கடந்த 14 நாட்களாக எங்கள் சக குடிமக்கள் ஒரு பயங்கரமான சோதனையை அனுபவித்து வந்தனர். அவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தாருடன் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அச்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அவர்கள் அச்சத்தில் இருந்து குணமடைந்து இயல்பு நிலைக்கு மாற இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவரது தனியுரிமையை மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இன்னும் 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக உள்ளனர்
தாக்குதலின் தொடக்கத்தில் இருந்து, ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடிமக்களை விடுவிக்க அவரது நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்து வருவதாகவும், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் இன்னும் நிறுத்தப்படவில்லை என்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறினார். விடுவிக்கப்பட்ட தாயும் மகளும் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் பணயக்கைதிகள் ஆவார்கள். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இன்னும் பணயக் கைதிகளாக உள்ளனர்
105 பில்லியன் டாலர் அவசர நிதி வழங்க வேண்டும் - அமெரிக்க அதிபர் கோரிக்கை
அதேநேரம், 105 பில்லியன் டாலர் அவசர நிதியாக வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் 10.6 பில்லியன் டாலர்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும். இது தவிர, ஆயுதங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்க உக்ரைனுக்கு 61.4 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும்.
இஸ்ரேலியர்கள் 90 நாட்களுக்கு விசா இல்லாமல் அமெரிக்கா செல்லலாம்
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியில் ஜோ பைடென் நிர்வாகம் இஸ்ரேலிய குடிமக்களுக்கு புதிய வசதிகளை வழங்கியுள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் 90 நாட்களுக்கு விசா இல்லாமல் அமெரிக்கா செல்ல முடியும். கடந்த மாதம், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மேலும் படிக்க - இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: 2,100 பேர் பலி, ஒரே இரவில் 200 ஹமாஸ் இலக்குகள் அழிப்பு
மருத்துவமனைகளை காலி செய்ய இஸ்ரேல் இராணுவம் உத்தரவு
இதற்கிடையில், காசா நகரில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையை காலி செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அல் ஜசீராவின் அறிக்கையின்படி, மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அதை காலி செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.
ஷமோனா நகரத்தை காலி செய்தது இஸ்ரேல்
வடக்கு நகரான கிரியாத் ஷ்மோனாவை இஸ்ரேல் அரசு காலி செய்துள்ளது. இது லெபனான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். சுமார் இரண்டு கிலோமீட்டருக்குள் வசிக்கும் 20 ஆயிரம் பேர் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாஹ் இங்கு தாக்குதல்களை நடத்தி வருகின்றார். பதிலடி கொடுக்க நமது ராணுவத்துக்கும் சில இடங்கள் தேவைப்பட்டன. அதன் காரணமாக காலி செய்யப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மறுபுறம், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்குப் பிறகு, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ