இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் செய்தியை கேள்விப்பட்ட உலகம் முழுவதும் இருக்கும் மக்களை ஒருகணம் உலுக்கி உள்ளது. இப்படி ஒரு மனிதபிமானமற்ற செயலை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி பலர் எழுப்பி வருகின்றனர். ஒரு இனப் பேரழிவை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது எனப் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் காசா நகரில் உள்ள அஹ்லி அரபு நகர மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் சுமார் 500-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு சிதறிக்கிடைக்கும் உயிற்ற உடல்கள், ரத்த வெள்ளம், தூக்கி விசப்பட்ட உடல் பாகங்கள், கதறல்கள், பெண்கள், குழந்தைகள் என காண்பதற்கு நெஞ்சை பதறவைக்கின்றது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் கூறியுள்ளது. அதேநேரம் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் மருத்துவமனை மீதான தாக்குதலை செய்தது இஸ்ரேல் தான் என வளைகுடா (Gulf) நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடந்த காஸாவின் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை வடக்கு காசாவில் உள்ளது. இந்த மருத்துவமனை ஆங்கிலிக்கன் தேவாலயத்தால் நடத்தப்படுகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால்தான் மருத்துவமனை தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர்.
மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் -பாலஸ்தீன அதிபர்
அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான கொடூர தாக்குதலில் காயமடைந்தவர்கள் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 30,000 பேர் சிகிச்சை பெற தஞ்சம் அடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை தாக்குதலுக்கு யார் காரணம்? ஆடியோ கிளிப்
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவம் தொலைபேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பினர் இருவர் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் குறித்து பேசிகின்றனர். இதில் மருத்துவமனை அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் இருந்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் சுமார் 10 ராக்கெட்டுகளை வீசியதாக கூறி இருக்கிறார். இதில் ஒன்று தவறுதலாக வீசப்பட்டது எனப் பேசுவதாக அந்த தொலைபேசி உரையாடல் அமைந்துள்ளது.
அந்த ஆடியோ கிளிப்பில், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொருவரிடம் கூறுகிறார், "இது நமது தரப்பில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக நடந்ததா? பதிலுக்கு, இரண்டாவது நபர் கூறுகிறார், இது அவ்வாறு தான் தெரிகிறது. ஏனென்றால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட் துண்டுகள் இஸ்ரேலிய இராணுவத்திற்கு சொந்தமானது அல்ல எனக் கூறுகிறார்.
மருத்துவமனை மீதான தாக்குதல் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்
மருத்துவமனை அருகே பாலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களின் ராக்கெட் ஒன்று திசை மாறி மருத்துவமனை மீது விழுந்ததாகவும் எனக்கூறி இஸ்ரேல் தரப்பில் வீடியோ வெளியிட்டப்பட்டு உள்ளது.
A failed rocket launch by the Islamic Jihad terrorist organization hit the Al Ahli hospital in Gaza City.
IAF footage from the area around the hospital before and after the failed rocket launch by the Islamic Jihad terrorist organization: pic.twitter.com/AvCAkQULAf
— Israel Defense Forces (@IDF) October 18, 2023
மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர்
மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் கூறியதை அடுத்து, அதற்கு பதில் அளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "எங்கள் குழந்தைகளை கொடூரமாக கொன்றவர்கள்.. தற்போது தங்கள் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்" எனப் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - ஹமாஸ் குழுவை அழித்துவிடுவேன் - ஆவேசத்துடன் இஸ்ரேல் பிரதமர்! என்ன நடக்கிறது?
அமெரிக்க அதிபர் பிடன் இஸ்ரேலை சென்றடைந்தார்
இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார். காசா மருத்துவமனை மீதான தாக்குதலை அடுத்து அரபு நாட்டு தலைவர்களுடனான ஜோ பைடனின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதாவது இஸ்ரேலை அடுத்து, ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனத்திற்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த நாடுகள் அனைத்து அவரது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 18, புதன்கிழமை) இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது X பதிவில், "காசாவின் அல் அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறோம். நடந்துகொண்டிருக்கும் மோதலில் தொடர்ச்சியான பொதுமக்கள் உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாகவும், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
Deeply shocked at the tragic loss of lives at the Al Ahli Hospital in Gaza. Our heartfelt condolences to the families of the victims, and prayers for speedy recovery of those injured.
Civilian casualties in the ongoing conflict are a matter of serious and continuing concern.…
— Narendra Modi (@narendramodi) October 18, 2023
காசா மருத்துவமனை தாக்குதல் -ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்
இந்த தாக்குதலைக் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க் கூறுகையில், "மருத்துவமனைகள் மிகவும் புனிதமானவை. எந்த சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. தாக்குதல்களும், படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குடிமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் உரியவர்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: 2,100 பேர் பலி, ஒரே இரவில் 200 ஹமாஸ் இலக்குகள் அழிப்பு
அக்டோபர் 7 முதல் இரு நாடுகளுக்கு இடையே போர்
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் இதுவரை 48 முறை சுகாதார நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாளை (அக்டோபர் 19, வியாழக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களுடன் அவர் நேரடியாக பேச்சு நடத்துவார்.
நாடு திரும்பிய இந்தியர்கள் - வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு டெல்லியை அடைந்தது. அனைவரையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இஸ்ரேல் நாடு எப்பொழு உருவாக்கப்பட்டது?
1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ