இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரது கூட்டணி அரசாங்கத்தின் மிக முக்கியமான கூட்டாளியான இடித் சில்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவமனைகளில் உணவு வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து எம்பி சில்மான் இதனை செய்துள்ளார்.
ஜெருசலேம்: இஸ்ரேலில், ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் நஃப்தலி பென்னட்டின் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடித் சில்மான் ராஜினாமா செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உணவு வழங்குவது குறித்த விதிகள் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, எம்பி இடிட் சில்மான் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். அவர் ஆதரவை வாபஸ் பெற்றதால், பதவியேற்ற ஓராண்டுக்குள், பிரதமர் நஃப்தாலி பென்னட்டின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இடித் சில்மான் கோபத்திற்கான காரணம்
இஸ்ரேலில் விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என நம்பப்படுகிறது. பிரதம மந்திரி நஃப்தலி பென்னட்டின் அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தாலும், 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பலத்தின் அடிப்படையில் அவர்களின் நிலை பலவீனமடைந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு ஈஸ்ட் கலந்த ரொட்டிகளை வழங்க அனுமதித்தது தான் பிரச்சனையாகியது. இதனை தேசியவாத யமினா கட்சியின் இடிட் சில்மான் எதிர்த்து ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலின் ஆன்மீக பாரம்பரியத்தின் படி இந்த உணவுப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
யூதர்களின் 40 நாட்கள் நீடிக்கும் பாஸ் ஓவர் என்னும் பண்டிகை கால விரதத்தில் யூதருக்கு சில கட்டுப்பாடு உண்டு. அதாவது அவர்கள் புளிப்பில்லா பிரட் எனும் வறண்ட பிரட்டுகள்ளைத் தான் உண்ண வேண்டும். ஈஸ்ட் சேர்த்து புளிக்கவைக்கபட்ட பிரட் உண்ண கூடாது. எனவே, மருத்துவமனையில் ஈஸ்ட் கலந்த உணவுப் பொருட்களை அனுமதித்திருப்பது ஆன்மீக மரபுகளுக்கு ஏற்ப இல்லை எனக் கூறி அவர் தற்போது அவர் பதவி விலகியுள்ளார்.
மேலும் படிக்க | எனது 'நண்பர்' மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர்
பென்னட் அரசில் 8 கட்சிகள் கொண்ட கூட்டணி அரசு
இஸ்ரேலில் தற்போதைய ஆளும் கூட்டணியில் இஸ்லாமியர்கள் முதல் பழமைவாத தேசியவாதிகள் மற்றும் தாராளவாதிகள் வரை எட்டு அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை எதிர்த்தன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தற்போது, நஃப்தலி பென்னட்டின் கூட்டணியில் 60 உறுப்பினர்கள் இருப்பார்கள். நாடாளுமன்றம் இன்னும் கூட்டத்தொடர் தொடங்கவில்லை, மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு போதுமான ஆதரவு உள்ளதா என்பதும் தெரியவில்லை. அரசாங்கம் பெரும்பான்மையை பெற தவறினால், மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடத்தப்படும்.
கிளர்ச்சி எம்பியை பாராட்டிய நெதன்யாகு
இஸ்ரேலின் யூத நம்பிக்கைகளையும் நாட்டு மக்களையும் புண்படுத்தும் வகையில் செயல்படும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடியாது என இராஜினாமா செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சில்மான் தெரிவித்தார். நாட்டில் வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தேசியவாத முகாமுக்கு அவர் திரும்பியதை வரவேற்றார். இந்திய பயணம் தொடர்பாக பென்னட் அரசாங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Israel: புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR