Jeff Bezos : இன்று ப்ளூ ஆரிஜன் விண்கலத்தில் விண்வெளிப்பயணம்

அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய பெசோஸ் விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில், ப்ளூ ஆர்ஜின் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2021, 11:12 AM IST
  • பெசோஸ் மற்றும் சக பயணிகள் விண்வெளிக்கு சென்று 11 நிமிடங்களில் திரும்புவர்.
  • விமானம் பூமியிலிருந்து சுமார் 100 கி.மீ தூரம் வரை செல்லும்
  • விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில், ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பெசோஸ்
Jeff Bezos : இன்று ப்ளூ ஆரிஜன் விண்கலத்தில் விண்வெளிப்பயணம் title=

அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய உலகின் பணக்கார தொழிலதிபர், ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளி பயணம் மேற்கொள்ள  தயாராக உள்ளார். பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் பணக்காரர் இல்லை என்றாலும், அவர் இந்த விமான பயணத்தின் மூலம் வரலாற்ற படைக்கிறார்.  ஜெப் பெசோஸ் விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில், ப்ளூ ஆர்ஜின் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட் (New Sheperd) என்னும் விண்கலத்தில்,  இன்று, மேற்கொள்ளும் இந்த பயணத்தில், பெசோஸ் உடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk), 8 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen)  ஆகியோர்  ஆகியோர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

இன்று பணம் மேற்கொள்ளஉள்ள நிலையில், பெசோஸ் தன்னுடன் பயணிக்கும் அணியினரை ரிலாக்ஸாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஜெஃப் பெசோஸ் மற்றும் அவருடன் செல்பவர்கள் மொத்தம் 11 நிமிடங்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பெசோஸ் உள்ளிட்டவர்கள் விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் முற்றிலும் தானியங்கி என்பதால் அதில் ஆபத்தும் உள்ளது என கூறப்படுகிறது.

ALSO READ | நீங்களும் விண்வெளிக்கு இலவசமாக பயணிக்கலாம்; பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கும்

பெசோஸ் மற்றும் சக பயணிகள் விண்வெளிக்கு சென்று 11 நிமிடங்களில் திரும்புவர். பெசோஸின் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 100 கி.மீ தூரம் வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது ஒலியின் வேகத்தை விட மூன்று படங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.   

தரையிறக்கம் இப்படி இருக்கும்

விண்கலம் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்போது அது ராக்கெட்டிலிருந்து பிரியும். சிறிது நேரம் விண்வெளியில் சுற்றும். இதற்குப் பிறகு, விண்வெளி காப்ஸ்யூல் பெசோஸ் (Jeff Bezos) உள்ளிட்ட குழுவினரை பூமியை நோக்கி அழைத்துச் வரும். புதிய ஷெப்பர்ட் ராக்கெட் தனது வேகத்தைக் குறைக்க பாராசூட்டைத் திறக்கும். அதன் பின்னர் கணினி கட்டுபாட்டின் உதவியுடன் சரியான இடத்தில் தரையிறங்கும்.

வரலாறு படைக்கப்போகும் விண்கலம்

மனிதர்களை ஏற்றிச் செல்லும் ப்ளூ ஆரிஜினின் விண்கலத்தின் முதல் விண்வெளிப் பயணத்தில், அதாவது ஜூலை 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்த விமானத்தில் பெசோஸின் சகோதரர் மார்க் அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk) மற்றும் 18 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen)  ஆகியோர்விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். 

ALSO READ | பூமியில் வெற்றிக் கொடி நாட்டிய ஜெப் பெசோஸின் விண்வெளிப் பயணம் விரைவில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News