கழிவறைக்குள் வைத்து பெற்ற மக்களை கதற கதற தாக்கிய தாய்..!

சிறுமியை பள்ளிக்கு கிழப்பும் போது கழிவறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கிய தாய்!! 

Updated: Jan 23, 2020, 04:58 PM IST
கழிவறைக்குள் வைத்து பெற்ற மக்களை கதற கதற தாக்கிய தாய்..!

சிறுமியை பள்ளிக்கு கிழப்பும் போது கழிவறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கிய தாய்!! 

அமெரிக்காவில் சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது பெற்றோர், ஆசிரியர், உறவினர் என யாராக இருந்தாலும் தண்டணை  கடுமையாக கிடைக்கும். இந்நிலையில், லிண்டா கிப்சன் என்ற 38 வயதுடைய பெண் தனது மகளை காலை நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கோபத்தில் வெகுண்டெழுந்து மகளின் தலையை கழிப்பறை இருக்கையில் வைத்து முட்டவைத்துள்ளார். 

இதையடுத்து, மகளின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு மிகவும் மோசமாக தாக்கினார். இந்த தாக்குதலால் சிறுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது கை உடைந்துள்ளதோடு உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் விண்டாவை கைது செய்தனர். மேலும், இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக விண்டா தனது மகளிடம் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.