அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அங்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி இனி அமெரிக்க சந்தையில் கிடைக்கும். அத்தகைய அனுமதியை வழங்கிய இரண்டாவது நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இந்த வகை இறைச்சி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த வகை இறைச்சி சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளது
கலிபோர்னியாவைச் சேர்ந்த அப்சைட் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தர சோதனைகளுக்குப் பிறகு ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அனுமதிக்கப் போவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கோழியிலிருந்து எடுக்கப்பட்ட செல்கள் உதவியுடன், ஆய்வகத்தில் இறைச்சி தயாரிக்கப்படும். கோழிகளை கொல்லாமல் இவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது. இப்போது வரை ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியின் விற்பனை மற்றும் நுகர்வு சிங்கப்பூரில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
"உலகம் உணவுப் புரட்சியை சந்தித்து வருகிறது, மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், உணவு விநியோகத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது" என்று FDA கமிஷனர் ராபர்ட் காலிஃப் செய்தியாளர்களிடம் கூறினார். அதற்காக அவர் தற்போது பல நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கா விரைவில் ஆய்வகத்தால் வளர்க்கப்படும் இறைச்சிக்கான முக்கிய சந்தையாக மாறும். சுற்றுசூழலை பாதிக்காது என கருதப்படும் ஒரு தயாரிப்பு இந்த ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி. ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கடல் உணவுகள் பற்றிய தகவல்களும் உள்ளது. ஆனால் எந்த தயாரிப்பு இன்னும் ஒப்புதல் பெறவில்லை
மேலும் படிக்க | பீசண்ட் தீவு: இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு!
முன்பு மெம்பிஸ் மீட்ஸ் என்று அழைக்கப்பட்ட அப்சைட் ஃபுட்ஸ், எஃப்.டி.ஏ.வின் இந்த முடிவை வரவேற்றது. ஆனால் ஒப்புதலுக்குப் பிறகு சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தயாரிப்பை வழங்கத் தொடங்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்று கூறியது. அப்சைட் ஃபுட்ஸுக்கு அமெரிக்க விவசாயத் துறையின் அனுமதியும் தேவைப்படும் என தி கார்டியனின் பத்திரிக்கை அறிக்கை கூறுகிறது.
எகிப்தில் நடந்த COP 27 உச்சிமாநாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி தயாரிப்புகளுக்கான FDA ஒப்புதல் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனெனில் எதிர்காலத்தில் அதிக நிறுவனங்கள் இந்தத் தொழிலில் சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ