வாஷிங்டன்: நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று அதிசயித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அதனை செயற்கைகோள் ‘அப்போலோ 11’ தகர்த்தெறிந்து. ஆம்.. அந்த சாதனையை நிறைவேற்றியவர், நிலவில் முதலில் கால் பதித்த நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது அனைவரும் அறிந்ததே.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோரும் பயணித்தனர்.
அப்போது நிலவிற்கு சென்று கால் பதித்த நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் இருந்து சேகரித்த மாதிரிகள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!
அப்பல்லோ 11 மிஷனில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள்
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ 11 பயணத்தின் போது சந்திரனில் இருந்து சில மாதிரிகளை சேகரித்தார். இப்போது இந்த மாதிரிகள் ஏலம் விடப்படுகின்றன இந்த மாதிரிகள் 5 அலுமினிய கூடுகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பின் ஒரு பகுதியாகும். ஏலம் விடப்படும் மாதிரிகள் 10 மிமீ கார்பன் டேப் ஆகும். அதில் சந்திரனில் சேகரித்த மாதிரிகளின் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!
மாதிரிகள் திருடப்பட்டன
விண்வெளி வரலாற்றில் இதுவே முதல் ஏலம் என்று நியூயார்க் ஏல நிறுவனமான போன்ஹாம்ஸ் கூறுகிறது. ஏலத்தில் சேர்க்கப்படும் இந்த நிலவின் தனித்துவமான துண்டுகளின் விலை 8 லட்சம் டாலர் (சுமார் ரூ. 6,07,50,400 கோடி) முதல் 1.2 மில்லியன் டாலர் (ரூ. 9,11,43,000 கோடி) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துண்டுகள் 'நாசாவால் தொலைந்து போனதாக' கருதப்பட்டது. கன்சாஸின் ஹட்சின்சனில் உள்ள காஸ்மோஸ்பியர் ஸ்பேஸ் மியூசியத்தின் கண்காணிப்பாளரான மேக்ஸ் ஆர்யாவால் அவை முன்னதாக திருடப்பட்டன.
புகைப்படங்களும் ஏலம் விடப்பட்டன
எனினும், இவை பின்னர் அமெரிக்க மார்ஷல்களால் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன. இவை திருடப்பட்ட மாதிரிகள் தான் என்பதை நாசாவின் டாக்டர் ராய் கிறிஸ்டோபர்சன் உறுதிப்படுத்தினார். முன்னதாக, நீல் ஆம்ஸ்ட்ராங் எடுத்த Buzz Aldrin's Moonwalk என்பதன் 70க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கோபன்ஹேகனில் $1,72,000 (சுமார் ரூ.1,30,61,336 கோடி)க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
அப்பல்லோ 11
அப்பல்லோ 11 என்ற அமெரிக்க விண்கலம், முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியது. கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 பயணத்தின் போது மனிதர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்தனர். இருப்பினும், இப்போது 2025-2026 இல் மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விண்வெளியில் போர் மூண்டால்... இண்டர்நெட், DTH, GPS என எதுவும் இயங்காது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR