விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!

விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்களும் அவ்வவ்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2022, 08:20 AM IST
விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!! title=

விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்களும் அவ்வவ்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா...

ஆம்... விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து, விமானத்தின் அடிபாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர். முதலில் எகிறிக் குதித்து, விமானத்தின் டயர் மீது ஏறி விட்டால், அதன் பின், டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என, விமான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு டயர் பகுதியில் ஒளிந்து கொள்பவர்கள், டயர் எப்போது உள்ளிழுக்கும் அல்லது வெளியேறும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.  இதை கணிக்க தவறுவோர், டயரில் சிக்கியோ அல்லது கீழே தள்ளப்பட்டோ உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் போது, அங்கு மிகவும் குளிரான தட்ப நிலை இருக்கும்  என்பதால், அங்கே நீண்ட நேரம்  தாக்கு பிடிப்பதும் மிகவும் கடினம். 

 

அந்த வகையில், ஒரு  நபர் 11 மணி நேரம் சரக்கு விமானத்தின் டயர் பகுதியில் மறைந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது இது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நபர் டச்சு இராணுவ காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 11 மணி நேர விமானத்தில் சரக்கு விமானத்தின் டயர்ப் பிரிவில் ஒருவர் பதுங்கிக் கொண்டு பயணித்து அதிசயமாக உயிர் தப்பினார். ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் வந்தபோது டச்சு அதிகாரிகளால் ஸ்டோவேவே மூக்கு சக்கரப் பகுதியில் மறைந்திருந்தது, அறிக்கைகளின்படி.

விமானம் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து புறப்பட்டதிலிருந்து அந்த நபர் சக்கரப் பிரிவில் ஒளிந்து கொண்டார் என ஷிபோல் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் காவல்துறையினர் கூறினர். அவருக்கு 16-35 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.

ALSO READ | Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா!

அந்த நபர் 'உடல் அளவில் நன்றாக இருக்கிறார்' என்று டச்சு இராணுவ போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு  அந்த நபர் சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது பலருக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.

"இந்த நபர் உயிருடன் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். விமானத்தில் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில், சுமார் 10,000 (கிலோமீட்டர்கள்) தூரத்திற்கு விமானம் பறந்த நிலையில்,  அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்" என்று ராயல் டச்சு இராணுவ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் ஹெல்மண்ட்ஸ் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதே போன்று  பயணிகள் லக்கேஜ்களை விமானத்தில் ஏற்றுபவர்கள், லக்கேஜ்களை ஏற்றி விட்டு அங்கே தூங்கி போய் தவறுதலாக பயணிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

ALSO READ | நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் தீருமா; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தைவான்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News