கணிதவியலில் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற பெண் மர்யாம் மிர்ஸகானி, அமெரிக்காவில் காலமானார். நாற்பது வயதான அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு காலமானார்.
"கணிதவியலுக்கான நோபல் பரிசு" என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம், நாற்பது வயதுக்கு உள்பட்ட கணித மேதைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
இந்த பதக்கம் இரானியரான பேராசிரியர் மிர்ஸகானிக்கு 2014-ம் ஆண்டு "சிக்கலான வடிவியல் மற்றும் இயக்கவியல் முறைகள்" பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.
1977-ம் ஆண்டில் பிறந்த பேராசிரியர் மிர்ஸகானி, இரானின் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் வளர்ந்தவர்.
பருவ வயதினருக்கான சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அவர் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2004-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின்னர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு கணிதவியல் ஃபீல்ட்ஸ் பதக்கம் கிடைத்தது.