Pakistan Economic Crisis: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷேபாஸ் ஷெரீப்புக்கு, அந்நாட்டின் பொருளாதார மந்தநிலை மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அரசுக் கருவூலத்தில் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தேசிய சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சம்பள உயர்வு அறிவிப்பை அடுத்த நாளே அரசாங்கம் திரும்பப் பெறும் சூழ்நிலை உருவானது.
சம்பள உயர்வை அறிவித்த புதிய பிரதமர் ஷாபாஸ்
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார் என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000 ஆகவும், ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று ஷெரீப் அறிவித்திருந்தார். அதோடு, 1 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் தனது முதல் உறுதியை அவர் அளித்தார்.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583
முந்தைய இம்ரான் அரசைக் கண்டித்த புதுப் பிரதமர்
இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியை கடுமையாக சாடிய புதிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை இம்ரான் அரசு சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டினார். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் பிற பொருளாதார சீர்குலைவுகள் காரணமாக நாடு முன்னேற முடியவில்லை என்று இம்ரானை அவர் சாடினார்.
ஒரு நாளில் மாறிய ஷாபாஸ்
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அறிவிப்புக்கு அடுத்த நாளே, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தவில்லை என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.
ஊழியர்களின் சம்பள உயர்வு
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட மிஃப்தா , 'சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதால், மீண்டும் ஊதியத்தை அதிகரிக்கவில்லை. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துகிறோம். ஆனால், அடுத்த பட்ஜெட்டில் சம்பள பிரச்சினை நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க | புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா
கடனில் தத்தளிக்கும் பாகிஸ்தான்
வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்று விழி பிதிங்கியிருக்கும் பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐஎம்எப் என பல இடங்களில் இருந்து பெருமளவு கடனை வாங்கியுள்ளது.
வாங்கிய கடனுக்குக் கொடுக்கப்படும் வட்டியால் பாகிஸ்தானின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. கடனும், கடனுக்காக வட்டியும் 3 ஆண்டுகளாக இம்ரான் அரசின் முதுகெலும்பை பதம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தலைக்கு மேல் கடன்சுமை வந்துவிட்ட நிலையில், தற்போது புதிய பிரதமாராக பதவியேற்றிருக்கும் ஷாபாஸ் ஷெரீப் முதல் நாளில் குறைந்தபட்சம் அரசு ஊழியர்களையாவது தன் பக்கம் இழுக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டால், அதை அடுத்த நாளே திரும்பப்பெறும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இது பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரியத் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
மேலும் படிக்க | அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR