செயற்கை இறைச்சி... ஹலாலா... ஹராமா... சிங்கப்பூரில் நடக்கும் விவாதம்!

Lab Grown Meat: இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் செயற்கை  இறைச்சி உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 4, 2024, 05:02 PM IST
  • ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சி.
  • சிங்கப்பூரில் கடந்த 2020ம் ஆண்டு செயற்கை இறைச்சி விற்பனை தொடங்கியது
செயற்கை இறைச்சி... ஹலாலா... ஹராமா... சிங்கப்பூரில் நடக்கும் விவாதம்! title=

Lab Grown Meat: உலகில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அதிலும் நாளுக்கு நாள் இறைச்சிக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் செயற்கை  இறைச்சி உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.

இதன் விளைவாக விலங்குகளின் உயிர் அணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டன. இந்நிலையில், செயற்கை இறைச்சி விற்பனை செய்யும் அனுமதி கொடுத்த முதல் நாடான சிங்கப்பூரில் (Singapore), செயற்கை இறைச்சி ஹலாலா அல்லது ஹராமா என்ற விவாதம் குறித்து முஃப்தி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹராமாக கருதப்படுமா ஹலாலாக கருதப்படுமா என்ற விவாதம் 

ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சியை இஸ்லாமியர்கள் உட்கொள்வது ஹராமாக கருதப்படுமா ஹலாலாக கருதப்படுமா என விவாதம் மேற்கொள்ளப்படும் நிலையில், இஸ்லாமியர்கள் இதனை உண்ணலாம் என்றும் எனினும் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஹலால் விலங்குகளின் செல்கள்

ஹலால் செய்யப்பட்ட விலங்குகளின் செல்களில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சிகள் ஹலாலாக கருதப்படும் என்று இஸ்லாமிய மத தலைவர் முக்தி கூறியுள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த முக்தி டாக்டர் நஸ்ருதீன் முகமது நசீர், இஸ்லாமிய மதத்தில் ஃபத்வா என்பது இஸ்லாமிய சமூகத்தை மதரீதியாக வழிநடத்தப்படுகிறது என்றும் முத்தி எனப்படும் தகுதி வாய்ந்த ஆன்மீகத் தலைவரால் ஃபத்துவா விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அதன்படி, ஹலால் செய்யப்பட்ட விலங்குகளின் செல்கள் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்கை இறைச்சியை உன்னலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வடகொரியாவின் கொடூரமான தொழிலாளர் முகாம்கள்: தப்பி பிழைக்க வாய்ப்பே இல்லை

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி சிங்கப்பூரில் விற்பனை 

சிங்கப்பூரில் கடந்த 2020ம் ஆண்டு செயற்கை இறைச்சி விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆய்வகங்களில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இறைச்சியை உட்கொள்ளலாமா கூடாதா என்பது குறித்து சிங்கப்பூரின் இஸ்லாமிய மத பேரவை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தி வருவதாக, இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்தார். எனினும் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை இறைச்சியை உண்ணலாமா கூடாதா என்பது குறித்து தொடர்ந்து விவாதம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்: முஃப்தி

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப ஆன்மீகத் தலைவர்கள், தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப அனுமதிகளை வழங்க வேண்டும் என்று சிங்கப்பூரின் இஸ்லாமிய மதகுருவான கூறினார். இஸ்லாமியர்கள் ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சியை மட்டுமே உண்ண வேண்டும் என்று சிலர் பாதிடுகின்றனர். ஆனால் ஃபத்வா விதிகளை விதிக்கும் கமிட்டி இது தொடர்பான விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை தெரிவித்துள்ளனர். அதன்படி ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி சிறப்பாக இருப்பதாகவும், அது ஹலால் முறையில் இறைச்சியின் செல்கள் மூலம் உருவாக்கப்பட்டதாக இருந்தால் சாப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

செயற்கை இறைச்சியை விற்பனை செய்ய அமெரிக்காவிலும் அனுமதி

வளர்ந்து வரும் தேவையை கருத்தில் கொண்டு சிங்கப்பூரை அடுத்து அமெரிக்காவிலும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் முதல் உடல் பெட்டிகை அதிகரிக்கும் மக்கள் வரை அனைவருக்கும் சத்து தேவை. புரதச்சத்தின் ஆதாரமாக இறைச்சி இருக்கும் நிலையில், அதற்கான தேவையும் அதிகரித்து வரும் நிலையில், கத்தியின்றி இரத்தமின்றி செயற்கை இறைச்சி மூலம் புரதத்தை பெறுவதை எளிதாக்கியுள்ளது இந்த விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சி என்றால் மிகையில்லை.

மேலும் படிக்க |  Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News