பாரிஸ்: விடுமுறை காலங்களில் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். மேலும் கொண்டாட்டங்களின் போது தடுப்பு நடவடிக்கைகளை மதிக்குமாறும் பிரெஞ்சு குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரான்சில் (France) தற்போது கொரோனாவின் ஐந்தாவது அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50,000 க்கும் மேற்பட்டொர் பாதிக்கப்படு வருகின்றனர். தற்போது அங்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால அவகாசம் 5 மாதங்களாக உள்ளது. எனினும், 2022 ஜனவரி 3 முதல் ஐந்து மாதங்களுக்கு பதிலாக நான்கு மாதங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படலாம் என்று சாஸ்டெக்ஸ் தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"ஹெல்த் பாஸை தடுப்பூசி (Vaccination) பாஸாக மாற்ற ஜனவரி தொடக்கத்தில் வரைவு மசோதா சமர்ப்பிக்கப்படும்" என்று அறிவித்த அவர், "இந்த பாஸ் தடுப்பூசிக்கு மட்டுமே செல்லுபடியாகும்" என்று வலியுறுத்தினார்.
ALSO READ | சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா! துக்கத்தை அனுபவியுங்கள்
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், நாட்டில் தடுப்பூசி சான்றிதழ்தான் சரியான ஆவணமாக கருதப்படும் என்றும், வெறும் பிசிஆர் பரிசொதனை மட்டும் போதாது என்றும் கூறினார்.
அதிகாரிகள் தவறான பாஸ்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் அபராதங்களை கடுமையாக்குவார்கள் என்றும் பிரான்சு பிரதமர் கூறினார்.
விடுமுறைகள் நெருங்கி வருவதால், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் காஸ்டெக்ஸ் பிரெஞ்சு குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.
மருத்துவமனைகள் நிரம்பி வழியப்போகின்றன என எச்சரித்த அவர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னும் பின்னும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரெஞ்சு குடிமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரான்சில் வெள்ளிக்கிழமை 58,128 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR