இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!!

Last Updated : Oct 3, 2017, 03:39 PM IST
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!! title=

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள்  வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.

 

 

இந்நிலையில் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெய்னர் வெயிஸ், பாரி சி. பாரிஷ், கிப் எஸ். தோர்ன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நாளை (அக்டோபர் 4-ம் தேதி) இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News