Nobel Prize 2021: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 04:10 PM IST
Nobel Prize 2021: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது title=

ஒஸ்லோ, நார்வே: இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த மதிப்புமிக்க விருது பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்படும். கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இருவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதைப் பெறுவார்கள் என்று நோபல் பரிசு அமைப்பு தெரிவித்துள்ளது.

நார்வேயின் ஒஸ்லோவில் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடைபெற்றது

நோபல் (Nobel Prize) தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற கூட்டத்தில் இதை அறிவித்தது. மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோர் உலகில் கருத்து சுதந்திரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர் என்று குழு கூறியது. குழுவின் கூற்றுப்படி, எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அமைதி ஸ்தாபனத்திற்கும் கருத்து சுதந்திரம் என்பது மிக முக்கியமான காரணியாகும்.

World Food Programme கடந்த ஆண்டு பரிசு பெற்றது

அமைதிக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த திட்டம் உலகில் பசி மற்றும் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதே சமயம், இந்த ஆண்டு கருத்து சுதந்திரத்தை முக்கியமானதாக தேர்வுக் குழு கருதுகிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கும் இந்த மதிப்புமிக்க விருது (Nobel Peace Prize 2021) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ: 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் ஒப்பிட முடியாத மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலக அளவில், மிகவும் உயர்ந்த, மதிப்புமிக்க விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அளிக்கப்படும் விருதுக்கான அறிவிப்பு சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டிலும் அறிவிக்கப்படுகிறது. 

நோபல் பரிசில் என்ன கிடைக்கும்?

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு, தங்க பதக்கமும், ரூ.8½ கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது. 

ALSO READ: 2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News