புதுடெல்லி: நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
- நியூசிலாந்தில் நடைபெற்ற மறுதேர்தலில் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) மாபெரும் வெற்றி எதிர் கட்சிகளும் வெற்றியை ஏற்றுக் கொண்டன.
- பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டிய பின்னர் வரலாற்று ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டது.
- ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் மீண்டும் பரஸ்பரம் போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டை சுமத்துகின்றன.
- அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், COVID-19 இலிருந்து மீண்டு சில நாட்களே ஆன நிலையில் பிரசாரம் செய்ய Michigan, Wisconsin செல்கிறார் டிரம்ப்…
- ஐக்கிய ராஜ்ஜியத்தின் COVID-19 ஆலோசகர் 'circuit-breaker' லாக் டவுனுக்கு அழைப்பு விடுக்கிறார்
- ஆஸ்திரியாவில் போலீசாருக்கு போன் செய்த 31 வயது தாய், தனது 3 மகள்களை கொன்றதாக சொல்லி, தானும் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக தெரிவித்தார்…
- SADS-CoV: பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தடுப்பூசி மூலம் ஆப்பிரிக்காவில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க சீன அதிகாரிகள் முயன்று வருகின்றனர். கடந்த ஆண்டு சீனாவில் இந்த நோய் தோன்றியபோது, அந்தத் தொற்றுநோயைத் தடுக்க மில்லியன் கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன.
- இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுடன் தனக்கு உறவு இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் ஜெனிபர் ஆர்குரி கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது,
- ஆர்மீனியாவுக்கு எதிராக அஜெரி படைகள் ட்ரோன்களை பயன்படுத்தியதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மாத தொடக்கத்தில் துருக்கிக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதை கனடா நிறுத்தியது.
Read Also | chicken nugget சாப்பிட விண்வெளிக்கு போகனுமா? என்ன கொடுமை சார் இது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR