Omicron: தங்கள் நிறுவனத்தின் பெயரை திருடியதாக ரஷ்ய நிறுவனம் WHO மீது வழக்கு

உலக சுகாதார நிறுவனம் (WHO) புதிய கோவிட் மாறுபாட்டிற்கு 'Omicron' என்று பெயரிட்டபோது, ​​​​அது உலகின் பிற பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உலக சுகாதார அமைப்பு  நினைத்து கூட பார்த்திருக்காது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2021, 10:00 AM IST
Omicron: தங்கள் நிறுவனத்தின் பெயரை திருடியதாக ரஷ்ய நிறுவனம் WHO மீது வழக்கு title=

 

உலக சுகாதார நிறுவனம் (WHO) புதிய கோவிட் மாறுபாட்டிற்கு 'Omicron' என்று பெயரிட்டபோது, ​​​​அது உலகின் பிற பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உலக சுகாதார அமைப்பு  நினைத்து கூட பார்த்திருக்காது.

WHO புதிய மாறுபாட்டை எதிர்த்துப் போராடி, தொற்றுநோயிலிருந்து மனிதகுலத்தைப் பாதுகாப்பது எப்படி என்ற ஆலோசனையில் மும்முரமாக இருக்கும்போது, ​​சைபீரிய தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, உலக சுகாதார அமைப்பு மீது வழக்குத் தொடர்ந்தார்.

Omicron Network of ophthalmology clinics என்ற மருத்துவமனையின் CEO, உலக சுகாதார அமைப்புக்கு எதிராக வழக்குத் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். புதிய கோவிட் மாறுபாட்டிற்கு தனது கிளினிக்கின் பெயரை சூட்டியுள்ளதால், தனது வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் படார் குற்றம் சாட்டியுள்ளார்.

READ ALSO | 3 மடங்கு ஆபத்தானது Omicron மாறுபாடு: ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல் 

"எங்கள் கிளினிக்கின் பெயர் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை என்பதோடு, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் முக்கிய சேவை வழங்கும் நிறுவனம் என்பதால், ஒமிக்ரான் என்ற வைரஸ் பெயரை சூட்டியுள்ளது எங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.

தொழிலதிபர் உலகம் முழுவதும் உள்ள தனது கிளினிக்குகளை சந்தைப்படுத்த பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். இருப்பினும், இப்போது, ​​புதிய கோவிட் மாறுபாட்டின் பெயரை ஒமிக்ரான் என வைக்கப்பட்டுள்ளதால், வலைதளத்தில் ஒருவர் தனது கிளினிக்குகளைத் தேடும் போது, ​​​​அவர்களுக்கு தங்கள் கிளினிக் குறித்த தகவல் ஏதும் கிடைக்காமல், கோவிட் மாறுபாடு பற்றிய செய்திகளையும் தகவலையும் மட்டுமே கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். "ஒமிக்ரான்' தொற்று காரணமாக உங்கள் உறவினர் அல்லது நண்பர் யாராவது இறந்துவிட்டால், அதே பெயரில் கிளினிக்கிற்குச் செல்ல தயக்க ஏற்படுவது இயற்கை எனவும்" என்று நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விளக்கினார்.

ALSO READ | குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு Omicron வேரியண்ட்டுக்கு காரணமா?

இதற்கிடையில், Omicron மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, மேலும் பல நாடுகள் இப்போது பயண கட்டுப்பாடு, RT-PCR சோதனைகள், லாக்டவுன், சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துதல் போன்ற கட்டுபாட்டு நடவடிக்கை மேற்கொண்டு  திரும்பி வருகின்றன.

ALSO READ: இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News