புது டெல்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த சில மாதங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்று அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. உலக வல்லரசு எனக்கூறிக்கொண்டு இருந்த அமெரிக்காவும் பொருளாதார மந்தநிலையுடன் போராடி வருகிறது. இதைச் சமாளிக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஒரு யோசனையை கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (Coronavirus in USA) தொற்றுநோயால் தங்கள் நாட்டில் ஏற்படும், ஏற்பட்டுள்ள விளைவுகளைச் சமாளிக்க, நாட்டு குடிமக்களுக்கு உதவுவதற்காக அரச கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து நேரடியாக குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த நேரடி நிதி பரிமாற்றம் சுமார் 500 பில்லியன் வரை இருக்கலாம். இது இரண்டு தவணைகளில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த தொகை இந்தியாவின் (Indian GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கிற்கு சமம். இந்த தொகை அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கு (USA Citizen) சரிசமமாக விநியோகிக்கப்பட்டால், 33 கோடி மக்களுக்கு சுமார் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.
இதுவரை இதுக்குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று டிரம்ப் (Donald Trump) கூறினார். ஆனால் இது தொடர்பாக அவரது நிர்வாகம் ஒரு திட்டத்தை தயார் செய்துள்ளதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தின்படி, அமெரிக்கர்களுக்கான திட்டம் 250-250 பில்லியன் டாலர் என இரண்டு தவணைகளில் இருக்க வேண்டும். முதலாவதாக, ஏப்ரல் தொடக்கத்தில் மற்றும் இரண்டாவது, மே மாதத்தின் நடுவில் விநியோகிக்கப்படலாம்.
ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காலங்களில் அமெரிக்காவில் உள்ள குடிமக்களுக்கு இதுபோன்ற உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை வெள்ளை மாளிகையின் முன்மொழிவு (உதவித்தொகை) மிகப் பெரியது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள இரண்டு தவணைகளில் அமெரிக்க குடிமக்களுக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை நேரடியாக வங்கயில் (Bank Account) செலுத்த நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அந்த உதவித்தொகை குடும்ப அளவு மற்றும் வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்றார்.