பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 10, 2021, 01:24 PM IST
  • இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன்
  • 2014 பெஷாவர் தாக்குதல் தொடர்பாக சம்மன்
  • தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழு
பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாதிகள், பெஷாவர் ராணுவப் பள்ளியில் 150க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வழக்கில், பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 10, புதன்கிழமை) சம்மன் அனுப்பியது.

சட்டவிரோத பயங்கரவாதக் குழுவுடன் ஒரு மாத போர்நிறுத்தத்தை இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் சம்மன் வந்துள்ளது தற்செயலானதா என்று தெரியவில்லை. 2014 பெஷாவர் பள்ளி தாக்குதல் நடந்த சமயத்தில் இம்ரான் கான் பதவியில் இல்லாததால், இரண்டு விவகாரங்களுக்கும் தொடர்பு இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சுமார் 70,000 கொலைகளுக்குக் காரணமானதாக கூறப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehrik-i-Taliban Pakistan) அமைப்பு தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக இருப்பதால், இம்ரான் கான் அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருப்பதால், அவருக்கு அதிக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதையும் மறுத்துவிட முடியாது. 

ALSO READ | பாகிஸ்தானின் விநோத சட்டங்கள் 

காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாக, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜியோ நியூஸ் ( Geo news) செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு கோபத்தை வெளிப்படுத்தியது. அட்டர்னி ஜெனரலின் (attorney general) கோரிக்கைக்கு பதிலளித்த நீதிமன்றம், பிரதமர் இம்ரான் கான், நீதிமன்ற அமர்வின் முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறியது.

ராணுவப் பள்ளி படுகொலையில் உயிரிழந்தவர்களின் பெற்றோரும் இந்த வழக்கு விசாரணையில் கலந்துகொண்டனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ​​2014 பயங்கரவாத தாக்குதலில் (terrorist attack) கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை இழந்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நாட்டின் உயர்மட்ட சிவில் மற்றும் ராணுவத் தலைமைக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலைமையை மறுஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலைக் கேட்டுக் கொண்டது.

ALSO READ | நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer

அந்த நடவடிக்கைகள், விசாரணையாக இருந்தாலும் சரி அல்லது பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வதாக இருந்தாலும் சரி, அதை அரசு நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, ​​ உயர்மட்ட தலைமைக்கு எதிராக எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியாது என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். TTP, பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

அதனால், பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தான் தலிபான்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, TTP உடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முயற்சிக்கிறது.

கடந்த மாதம், பிரதமர் இம்ரான் கான் அளித்த ஒரு பேட்டியில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் உதவியுடன் TTP உடன் "நல்லிணக்க" பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கு, அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்தனர்.

ALSO READ | கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News