உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்ய ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் கிவ், மேற்கு உக்ரைன் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல்களை உக்ரைன் ஆபத்தில் உள்ளது. கருங்கடலில் ஒரு முக்கிய போர்க்கப்பலை அழித்தது மற்றும் ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளால் கோபமடைந்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் மீது புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்தது.
இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல்
கடந்த 52 நாட்களாக நடந்து வரும் போரின் போது ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ரஷ்யாவின் இந்தக் கூற்றை உக்ரைன் மக்கள் மறுத்துள்ளனர். உக்ரைனில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சிவிலியன்கள் உயிரிழப்புகள் அம்பலப்படுத்தப்படுகின்றன.
900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட செய்திகள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யப் படைகள் பின்வாங்கியதை அடுத்து, கியேவின் புற நகர் பகுதி மற்றும் கிராமங்களில் உள்ள அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட சடங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டது. சனிக்கிழமை அதிகாலையில் கிவ்வில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேயர் விட்டலி கிளிட்ச்கோ அங்கு தாக்குதல் நடந்தததாகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
நகருக்கு திரும்பி வர வேண்டாம் என மேயர் அறிவுறுத்தல்
போர் மூளும் போது ஊரை விட்டு வெளியேறியவர்களை தற்போது திரும்பி வர வேண்டாம் என மேயர் அறிவுறுத்தியுள்ளார். "தலைநகரில் மேலும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளது" என்று கிளிட்ச்கோ எச்சரித்துள்ளார். நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரங்களில் இன்னும் சில நாட்கள் தங்க விருப்பம் இருந்தால், அங்கேயே இருங்கள் என அறிவுறுத்தினார்.
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு கிவ்வின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தின் கள நிலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. கிவ்வின் தென்கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் பல சோவியத் பாணி அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் சென்டர்கள், பெரிய சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ரயில் யார்டுகள் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR