Safety Pin: சேப்டி பின் கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் !

புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் .

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2022, 05:07 PM IST
Safety Pin: சேப்டி பின் கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் ! title=

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் . அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன, அது ஏன், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இன்று அறிந்து கொள்ளலாம். 

ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849 ஆம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவர் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். அவருக்கு அதிக அலவில் கடன் இருந்தது. கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த அவர்,   கடனை அடைக்க அவர் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளில் சேப்டி பின்னும் ஒன்று. சேப்டி பின் கண்டிபிடிக்கப்பட்ட பிறகு, இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வால்டர் உணர்ந்தார். அதன் பிறகு காப்புரிமை பெற்று விற்றார். அந்த நேரத்தில், இந்த கண்டு பிடிப்பிற்காக அவருக்கு $ 400 கிடைத்தது.

மேலும் படிக்க | அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

இதுமட்டுமின்றி பேனா,  கத்தியை கூர்மைப்படுத்தும் கருவிகள், ஸ்பின்னர்கள் போன்றவற்றையும் வால்டர் ஹன்ட் கண்டு பிடித்தார். அவர் ஒரு தையல் இயந்திரம்  கூட கண்டுபிடித்தார்.

ஒருமுறை வால்டரின் மனைவி ஏதோ வேலையாக வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் இருந்த பட்டன் உடைந்தது. அந்நிலையில், வால்டர் ஒரு பொத்தானாகச் செயல்படும் வகையில் சிறு கம்பியைக் கொண்டு தயாரித்து அவருக்கு உதவினார். இது தான் சேப்டி பின் கண்டி பிடிக்கப்பட்டது தொடர்பான கதை. அப்போது அதற்கு டிரெஸ் பின் என்று பெயர் சூட்டப்பட்டது.

மாறிவரும் காலத்திலும் அதன் பயன் குறையவில்லை. இதை தயாரிக்கும் நிறுவனங்கள், அதன் டிசைனில் குளறுபடி இல்லாமல், பெண்களின் புடவையின் நிறத்திற்கேற்ப பின்னை கலர்ஃபுல்லாக செய்தன. 

ஹன்ட்டின் இந்த கண்டுபிடிப்பபான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிக்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது. பெண்கள் புடவை முதல் சல்வார் கமீஸ் வரை அனைத்திற்கும் சேப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இது சேப்டி பின் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News