மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனுக்கு ஆபத்து அதிகரிக்கும்: ரஷ்யா எசரிக்கை

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறேன் என்று ரஷ்ய அதிபர் சொன்னதன் பின்னணியும், புடினின் மேற்கத்திய நாடுகளுக்கான எச்சரிக்கையும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2022, 06:57 AM IST
  • தானிய ஏற்றுமதி செய்ய உக்ரைனுக்கு அனுமதியளிக்கும் புடின்
  • உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்தால் விளைவு மோசமாகும் என எச்சரிக்கும் ரஷ்யா
  • ரஷ்ய அதிபருடன் பிரான்சு மற்றும் ஜெர்மன் தலைவர்கள் பேச்சுவார்த்தை
மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனுக்கு ஆபத்து அதிகரிக்கும்: ரஷ்யா எசரிக்கை title=

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகம் நிலைமையை மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவது ஆபத்தானது என்று கூறினார்.

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா அனுமதிக்க விரும்புவதாக மேற்கத்திய தலைவர்களுக்கு உறுதியளித்த ரஷ்ய அதிபர், "நிலைமையை மேலும் சீர்குலைக்கும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் அபாயங்கள்" இருப்பதாகவும் எச்சரித்தார்.  

மேலும் படிக்க | வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் "நேரடி தீவிர பேச்சுவார்த்தைகளை" நடத்துமாறு, ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இருவரும் ரஷ்ய அதிபரிடம் புடினிடம் கேட்டுக் கொண்டனர்.

ரஷ்ய அதிபருடனான ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான உரையாடலில் "உக்ரைன் நாட்டில் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும்" என்று மேற்கத்திய தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

அசோவ்ஸ்டல் (Azovstal தொழிற்சாலையில் உள்ள 2,500  வீரர்களை விடுவிக்கவேண்டும் என்றும் ரஷ்ய அதிபரிடம், இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

மேலும் படிக்க | வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

உக்ரைனில் போர் நீடித்து வரும் நிலையில், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமைகோரல் விடுத்துள்ளது..

டான்பாஸ் பகுதியில் ரஷ்யர்கள் "அதிகபட்ச பீரங்கிகளை குவித்துள்ளனர்" என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்ததால், க்ராஸ்னி லிமன் நகரம் ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் செல்லும் சாலையில் ரஷ்ய துருப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக "சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை" அறிவித்தார், ரஷ்யப் படைகள் அண்டை நாட்டின் மீது படையெடுத்தன,

இருப்பினும், கெய்வைச் சுற்றி கடுமையான எதிர்ப்பின எதிர்கொண்ட பிறகு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கிழக்கு உக்ரைனில் தனது படைகளை குவிப்பதாகக் கூறியது.

மேலும் படிக்க | தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தை: வடகொரியா

செவெரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் ஆகிய இடங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறிவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன, இருப்பினும், பிராந்தியத்தில் சண்டை தொடர்பான முரண்பட்ட அறிக்கைகள் வெளியாகிவருவதால் உண்மையான நிலைமை தெரியவில்லை..

 அமெரிக்கா, உக்ரைனுக்கு, கூடுதல் ராணுவ உதவிகளை வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புடின் ஜெர்மன் மற்றும் பிரான்சு நாட்டு தலைவர்கலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News