ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்சஸ் ஆட்சியை கலைத்து அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார்!
ஐரோப்பாவில் எஞ்சியிருக்கும் சில சோசலிச தலைவர்களில் ஒருவர் சான்சஸ் ஆவார். இத்தாலி மற்றும் பிற இடங்களில் பிரபலமாக உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியோரை சவாலாகக் கொண்டிருக்கும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த ஆதரவாளராக நின்றவர்.
ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சியின் சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, பெட்ரோ சான்சஸ் ஸ்பெயினின் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தற்போது தனது ஆட்சிகாலம் முடிவதற்கு முன்னதாகவே ஆட்சியை கலைத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் இத்தேர்தல் ஆனது வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேசிய அவர் "முடிவெடுக்கும் பொறுப்பு ஸ்பானிய மக்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது, மக்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்" என குறிப்பிட்டு தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் அதிகரித்து வரும் துருவமுனைப்பு மற்றும் கட்சியின் பிளவுகளை உறுதிப்படுத்த இந்த வாக்கெடுப்பு தேவையானதாகிறது. ஸ்பைன் நாட்டில் இரு கட்சி முறை என்ற முறைமைக கடந்த 2015 -ல் உடைந்துவிட்டதாக கருதப்படுகிறது, மேலும் 2011-ல் திரு. ரஜோய் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றதில்லை.
அந்த வகையில் தற்போது நடைப்பெற்று வரும் ஆட்சியும் பல இன்னல்களை சந்தித்த வருகிறது. குறிப்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கி ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் அரசியல் சச்சரவுகளுக்கு வாய்ப்புகள் அதிமாகவே நிலவி வருகின்றது.
இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டவே பெட்ரோ சான்சஸ் தற்போது நாடாளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த முறை நடைபெறும் தேர்தலிம் ஏதேனும் ஒரு கட்சி தனிப்பெருன்பான்மையுடன் வெற்றிப்பெறுமே ஆனால் ஸ்பெயினில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு சற்று காலம் முடிவு கிடைக்கலாம்....