மிக மலிவான விலையில் ஸ்பெயின் கிராமம்; விலையை கேட்டால் வியப்பில் மயக்கம் வரும்!

நிலம், பொன் போன்றவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பலரும் கருதுவதால், நிலம், வீடு, நகை போன்றவற்றில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 02:11 PM IST
  • ஸ்பெனில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் சால்டோ டி காஸ்ட்ரோ.
  • கிராமத்தில் இருந்த பலரும் இப்போது வெளியேறி விட்டனர்.
  • கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கத்தில் வாங்கினார்.
மிக மலிவான விலையில் ஸ்பெயின் கிராமம்; விலையை கேட்டால் வியப்பில் மயக்கம் வரும்! title=

நிலம், பொன் போன்றவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பலரும் கருதுவதால், நிலம், வீடு, நகை போன்றவற்றில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், பல சமயங்களில் பெரிய அளவிலான நிலத்தை வாங்கி, அதனை பிளாட் போட்டு விற்றோ, அல்லது பிளாட்கள் எனப்படும் பல மாடிக் கட்டிடங்களை கட்டி விற்றோ பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஸ்பெயினில் கிராமம் விற்கப்படுகிறது., விலையைக் கேட்டதும் அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்படும். மிகவும் குறைவான விலையில் ஒரு கிராமமே விலைக்கு வந்துள்ளது.

ஸ்பெனில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் சால்டோ டி காஸ்ட்ரோ. இந்த கிராமத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதன் ஆவணங்கள் முற்றிலும் சரியாக உள்ளது. அதன் உரிமையாளர் அதை விற்க முன் வந்துள்ளார். அவர் அதில் ஒரு ஹோட்டல் கட்ட விரும்பினார். ஆனால், நீண்ட காலத்திற்கு முன்பே நகரத்திற்கு குடி போன நிலையில், தனது எண்ணங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. இப்போது இந்த நபர் தனது வயதை கருத்தில் கொண்டு, இனிமேல் பராமரிப்பது கடினம் என எண்ணி, அதனை விற்க நினைக்கிறார். அந்த கிராமத்தில் இப்போது பலரும் வெளியேறி விட்டனர் என்பதும் ஒரு காரணம்.

மேலும் படிக்க | 9ஆவது குழந்தை வரப்போகுது... அதனால் இன்னொரு பொண்ணு வேணும் - அடம்பிடிக்கும் பிரபலம்

இக்கிராமத்தில் 44 வீடுகள், ஹோட்டல், தேவாலயம், பள்ளிக்கூடம், நகராட்சி நீச்சல் குளம், விளையாட்டுப் பகுதி, பழைய சிவில் காவலர் முகாம்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதியவர் 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கத்தில் வாங்கினார். 2008ம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையைத் தொடர்ந்து, இந்த கிராமத்தில் மேற்கொள்ள இருந்து பல திட்டங்களை அவர் கிடப்பில் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த கிராமத்தின் ஒரே குறை என்னவென்றால், இது ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் எல்லையில் அமைந்துள்ளது. அதன் விலையாக 2.5 லட்சம் யூரோ, அதாவது சுமார் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே உரிமையாளர் கோருகிறார். ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெறிச்சோடி கிடந்த இக்கிராமத்தின் கட்டடங்கள் சிதிலமடைந்துள்ளன. எனினும், மலிவான விலை காரணமாக, சிலர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | திகில் அனுபவத்தை கொடுக்கும் இங்கிலாந்து சிறை! கேள்விபட்டிருக்கிறீர்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News