இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட உச்சநீதிமன்றம் தடை!

இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

Last Updated : Dec 3, 2018, 05:26 PM IST
இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட உச்சநீதிமன்றம் தடை! title=

இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதிபர் சிறிசேனாவின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவினை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ஆம் நாள், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். (இவரை தொடர்ந்து இதுவரை 30 அமைச்சர்கள் ராஜபக்சே அரசவையில் பதவியேற்றுள்ளனர்)

அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அதிபரின் ஆதரவை நிரூபிக்க பெரும்பான்மை வாக்கெடுக்குபிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வாக்கெடுப்பிற்காப பேரவை கூட்டப்பட்ட கலகத்தில் முடிய ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தாமே பிரதமர் பதவியில் நீடிப்பதாக, ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

இதனால், இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்தது. இதைதொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்க விடுத்த உத்தரவை சிறிசேனா திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ராஜபக்சே பிரதமராக தொடர தடை விதித்துள்ள இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது அமைச்சரவையும் செயல்பட தடை விதித்துள்ளது. இதனால், பெரும்பான்மையை மீண்டும் நிரூபித்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக  வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Trending News