பாகிஸ்தான் கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, இப்போது கராச்சியில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 12:25 AM IST
  • தலைமையகம் தவிர, பல மாடி கட்டிடத்திலும் சில பயங்கரவாதிகள் உள்ளனர்.
  • ஷஹ்ரா-இ-பைசல் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • கராச்சியில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல்! title=

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, இப்போது கராச்சியில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 8 முதல் 10 பயங்கரவாதிகள் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து ஆவேசமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், கராச்சி காவல்துறை அலுவலகத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தலைமையகம் தவிர, பல மாடி கட்டிடத்திலும் சில பயங்கரவாதிகள் உள்ளனர். ஷஹ்ரா-இ-பைசல் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கராச்சி காவல்துறை தலைமையகத்திற்குள் நுழைந்த இந்த பயங்கரவாதிகள், கனரக வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்; தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கியாலும் சுடுகின்றனர். பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் மற்றும் போலீஸ் அனைத்து பக்கங்களிலும் இருந்து AIG அலுவலகத்திற்கு அருகில் உள்ள பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். தற்போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

காவல் துறை தலைமையகம் மீது தாக்குதல்

பயங்கரவாதிகள் முதலில் கராச்சி காவல்துறை தலைமை அலுவலக கட்டிடத்தின் பிரதான வளாகத்தில் அரை டஜன் கைக்குண்டுகளை வீசிவிட்டு உள்ளே நுழைந்தனர். துணை ராணுவப் படையினருக்கும், காவல்துறைக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை சுற்றி வளைக்க, மாவட்டம் மற்றும் பகுதியின் அனைத்து மொபைல் வேன்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குச் செல்லும் நகரின் பிரதான சாலைக்கு அருகில் கராச்சி காவல்துறைத் தலைவரின் அலுவலகம் அமைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கவும்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!

சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா கூறிய கருத்து

சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா தாக்குதல் குறித்து கூறுகையில், ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து மூன்று பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் படையினர் விடுவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை என்றார். டிஐஜிக்கு அறிவுறுத்தியபோது, ​​​​இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் என்று ஷா கூறினார். இதுபோன்ற தாக்குதல்களை எக்காரணம் கொண்டும் சகித்தும் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார். இரவு 7.15 மணியளவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் காவல் துறை தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.

தாக்குதலுக்கு பிலாவல் பூட்டோ கண்டனம்

பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'கராச்சி காவல்துறை தலைமையகம் மீதான தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். கடந்த காலங்களிலும் சிந்து காவல்துறை, தீவிரவாதிகளை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை தோற்கடித்தது. எங்கள் ஜவான்கள் மீண்டும் இதேபோன்ற பதிலடியை கொடுப்பார்கள் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IMF நிபந்தனைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன: பாகிஸ்தான் பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News