Tsunami Warning: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை!!

7.4 ரிக்டர் அளவிலான ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் அலாஸ்காவைத் தாக்கியதாகவும், அதன் பிறகு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 22, 2020, 01:52 PM IST
  • அலாஸ்காவின் சிக்னிக் நகரிலிருந்து 75 மைல் தெற்கே பூகம்பத்தின் மையப்பகுதி இருந்தது.
  • நிலநடுக்கம் பூமிக்கு கீழே 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது.
  • 2004 ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட சுனாமி மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
Tsunami Warning: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை!! title=

உலக அளவில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இயற்கையும் அவ்வப்போது, நிலநடுக்கம், புயல், வெள்ளம் என பல விதங்களில் தன் இருப்பை தெரியப்படுத்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவதைக் கண்டு கொண்டிருக்கிறோம்.

7.4 ரிக்டர் அளவிலான (7.4 Richter scale) ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் அலாஸ்காவைத் தாக்கியதாகவும், அதன் பிறகு, சுனாமி (Tsunami) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் (America) தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது. அலாஸ்காவின் சிக்னிக் நகரிலிருந்து 75 மைல் தெற்கே பூகம்பத்தின் மையப்பகுதி இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூகம்ப நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ALSO READ: பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம்!! அசாமில் 24.19 லட்சம் மக்கள் பாதிப்பு; இதுவரை 87 பேர் இறப்பு

அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 804 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் 0612 UTC- ல், பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கில் 96 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவிலும் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை நிலையை உருவாக்கியுள்ளாது என்று USGS தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு கீழே 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது.

முன்னதாக 2004 ஆம் ஆண்டு, சுமத்ரா அந்தமான் பகுதிகளை மையப் பகுதியாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வந்த சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து என பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

Trending News