இனி ‘துருக்கி’ அல்ல ‘துருக்கியே’ : துருக்கி அதிபர் எர்டோகன்

துருக்கியே என்ற வார்த்தை துருக்கிய நாட்டின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2022, 07:56 AM IST
  • துருக்கி அதிபரின் சமீபத்திய அறிவிப்பு
  • புதிய பெயர் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது.
  • துருக்கியே என்ற பெயர் முன்பே பயன்படுத்தப்பட்டது.
இனி ‘துருக்கி’ அல்ல ‘துருக்கியே’ : துருக்கி அதிபர் எர்டோகன் title=

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திர வேலைகளுக்கு பயன்படுத்தப்படும்.

அதிபரின் அறிவிப்பு

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'துருக்கி' என்ற பெயரை துருக்கியா என மாற்றியதாக அறிவித்தார். துருக்கியே என்ற வார்த்தை துருக்கிய நாட்டின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். எர்டோகன் நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் படிக்க | கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா - அமெரிக்கா!

தனது பெயரை மாற்றிக் கொண்ட நாடுகள்

சமீபத்தில், நெதர்லாந்து உலகில் தனது இமேஜை எளிதாக்க 'ஹாலண்ட்' என்ற பெயரை கைவிட்டது. அதற்கு முன் கிரீஸுடனான அரசியல் தகராறு காரணமாக 'மாசிடோனியா' என்ற பெயரை வடக்கு மாசிடோனியா என மாற்றியது. 1935 இல், ஈரான் தனது பெயரை மாற்றியது. முன்னதாக பெர்ஷியா என அழைக்கப்பட்டது. பெர்ஷியா என்ற சொல் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஈரான் என பெயர் மாற்றப்பட்டது.

துருக்கியே ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

துருக்கிய மொழியில் துருக்கி என்ற பெயர் துருக்கியே என்று அழைக்கப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு மேற்கத்திய ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, துருக்கி, துருக்கியே என்று தான் அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, ஐரோப்பியர்கள் இந்த நாட்டை ஒட்டோமான் மாநிலம் என்றும் பின்னர் துருக்கியே என்றும் குறிப்பிட்டனர். பின்னர் நாளடைவில் துருக்கி என்று அழைக்கப்பட்டது.  அதுவே அதிகாரப்பூர்வ பெயராக மாறியது. அதே சமயம் பெயரை மாற்றுவது என்பது வழக்கத்திற்கு மாறான விஷயம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முடிவு நாட்டின் பிராண்டிங் தொடர்பானது எனவும் கூறுகின்றனர்.

மேலும்  படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News