கியூபெக்: கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இது வரை ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
வட அமெரிக்க நடான கனடாவில் உள்ள கியூபெக் நகரில் பிரசித்தி பெற்ற மசூதி ஒன்ரில் மாலை தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திடிரென தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற போது மசூதியில் சுமார் 40 பேர் இருந்ததாக தகவல்கள் கூறுகினறன. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவத்தையடுத்து போலீசார் அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்ல கனடா அரசு தடை விதித்ததில் இருந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மசூதி வாசலில் பன்றியின் தலையை மர்ம நபர்கள் முஸ்லீம் பண்டிகையான ரமலான் அன்று வீசிச்சென்றனர்.