கொடுத்து வச்ச நாய்... ரூ. 16 லட்சத்தில் சொகுசு வீடு - என்னென்ன வசதியெல்லாம் இருக்கு பாருங்க!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாய்க்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு நாய் வீட்டை கட்டியுளளார். இதன் மதிப்பு ரூ. 16.5 லட்சமாகும். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2023, 02:05 PM IST
  • மினி பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட வசதிகளுடன் வீடு அமைக்கப்பட்டுள்ளது.
  • அந்த நாய்க்கு மெத்தை, தலையணை உடன் படுக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அந்த நாய் தான் தனக்கு பெஸ்ட் பிரெண்ட் என அதன் உரிமையாளர் கூறினார்.
கொடுத்து வச்ச நாய்... ரூ. 16 லட்சத்தில் சொகுசு வீடு - என்னென்ன வசதியெல்லாம் இருக்கு பாருங்க! title=

தற்போது பலரும் தங்களின் செல்லப்பிராணிகள் மீது பெரும் பிரியத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக, வீட்டு நாய்கள் செல்லப்பிராணிகளில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. வாலை அசைப்பதில் இருந்து எச்சில் முத்தங்கள் வரை நாய்கள் தங்களின் அன்பை வெளிக்காட்டி பிரியத்தை பெற்றுக்கொள்கின்றன. 

ரேஷன் கார்டுகளில் அந்த நாயின் பெயரை சேர்க்கும் அளவிற்கு குடும்பத்தினருடன் அது ஒன்று கலந்துவிடுகிறது. மேலும், அந்த நாயின் விஸ்வாசமும், விளையாட்டும் யாருக்கு தான் பிடிக்காது.  அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாய்க்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு நாய் வீட்டை கட்டியுளளார். இதன் மதிப்பு ரூ. 16.5 லட்சமாகும். 

மேலும் படிக்க | உடலுறவில் சாம்பியன்ஷிப் போட்டி! விளையாட ரெடியா? முழு விவரம் இதோ!

அமெரிக்காவை சேர்ந்த யூ-ட்யூபர் பிரன்ட் ரிவேரா, தனது நண்பர்களுடன் இணைந்து இந்த வீட்டை கட்டியுள்ளார். அவர் கூறையுடன் கூடிய வீட்டை கட்டியுள்ளார். லைட்டுகள், படிகட்டுகள், வேலிகள் அமைத்து வீட்டை கட்டியுள்ளனர். பெயிண்ட் அடித்து, வீட்டை அலங்கரித்தும் உள்ளனர். மேலும், அந்த நாய் வீட்டில் அதற்கென தனி அலமாரி, மினி பிரிட்ஜ், படுக்கையறை, டிவி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. படிக்கட்டுக்கு மேல் படுக்கை அமைத்து, அதில் மெத்தை, தலையணை வைத்து அலங்கரித்துள்ளார். 

அழகிய குடும்ப புகைப்படம், சின்ன காபி டேபிள், பூந்தொட்டி, வரவேற்பு கம்பளம் என பினிஷிங் டச்சையும் நச்சென கொடுத்திருக்கிறார். வீட்டிற்கு 'Charley's House' என பெயர் வைத்துள்ளார். அந்த நாயின் பெயர் சார்லி என இதன்மூலம் அறிய முடிகிறது. இந்த வீட்டை சார்லியின் பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
  
சார்லியை வளர்க்கும் பிரன்ட், தான் வேலைக்கு செல்லும்போது நாயை பார்த்துக்கொள்ள தனி பணியாளரையும் வைத்திருக்கிறார். சார்லி கடந்த ஓராண்டாக தனக்கு பெஸ்ட் பிரண்டாக இருந்துவருகிறது என்றும் முன்பு தனக்கு இருந்த இரண்டு நாய்களின் மரணத்திற்கு பிறகு சார்லி தான் ஆறுதலாக இருக்கிறது எனவும் பிரன்ட் தெரிவித்தார். சுமார் 16 லட்ச ரூபாய்க்கு, நாய்க்கு வீடு கட்டியது நெட்டிசன்களை கதறவைத்துள்ளது. நாய்க்கு இவ்வளவு செலவு செய்வது ஏற்கதக்கது இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | வெற்றியின் சின்னம் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் இருந்து பறித்த பிரிட்டன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News