Donald Trump-புக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது: FBI

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு விஷம் அடங்கிய கடிதம் அனுப்பிய சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் கனடாவிலிருந்து கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 01:41 PM IST
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு விஷம் அடங்கிய கடிதம் அனுப்பிய சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த வழக்கை விசாரிப்பதில் FBI- உடன் ஒத்துழைக்கிறோம் என்று கனேடிய போலீசார் தெரிவித்தனர்.
  • கனடாவிலிருந்து அமெரிக்கா வரும் போது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Donald Trump-புக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது: FBI title=

வாஷிங்டன் டி.சி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு (Donald Trump) விஷம் அடங்கிய கடிதம் அனுப்பிய சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் கனடாவிலிருந்து கடிதத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பாதுகாப்புத் துறை அக்கடிதத்தைக் கைப்பற்றி விட்டது. பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை. 

கனடாவிலிருந்து (Canada) அமெரிக்கா வரும் போது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதில் FBI- உடன் ஒத்துழைக்கிறோம் என்று கனேடிய போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ: Donald Trump-ற்கு வந்த விஷம் தடவிய கடிதம்... விசாரணையில் இறங்கிய அமெரிக்க FBI..!!!

விஷம் அடங்கிய கடிதம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது

கடந்த வாரம் Ricin அடங்கிய டிரம்பின் கடிதத்தை அதிகாரிகள் பிடித்தனர். இந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க ஏஜென்சிகள் அந்தப் பெண்ணை கண்காணித்து வந்தனர். உண்மையில், வெள்ளை மாளிகைக்குச் (White House) செல்லும் ஒவ்வொரு பொருளும் உன்னிப்பாக ஆராயப்பட்டு அதன் பின்னரே உள்ளே அனுப்பப்படுகிறது. அவ்வகையில் செய்யப்பட்ட சோதனையின் போது இந்த கடிதம் சிக்கியது.

Ricin மிகவும் கொடிய விஷம்

Ricin மிகவும் கொடிய விஷமாக கருதப்படுகிறது. அதில் ஒரு சிறிய அளவு கூட மனிதர்களுக்கு ஆபத்தானது. இது ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இதை தூள், மாத்திரை அல்லது திரவ வடிவில் பயன்படுத்தலாம். அதன் 500 மி.கி அளவே ஒரு நபரைக் கொல்ல போதுமானது.

Ricin தொடர்பான வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

2014 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) மற்றும் பிற அதிகாரிகளுக்கு Ricin அடங்கிய கடிதங்களை அனுப்பியதற்காக ஒரு மிசிசிப்பி மனிதருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், 2018 ஆம் ஆண்டில், ஒரு முன்னாள் கடற்படை வீரர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளுக்கு Ricin அடங்கிய கடிதத்தை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். 

ALSO READ: 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News