நீச்சலுக்கு போன பெண் மாயம்; 20 நாட்களுக்கு பின் கால்வாயிலிருந்து மீண்ட அதிசயம்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நீச்சல் செய்ய போன பெண் காணாமல் போனார்.  20 நாட்களுக்குப் பிறகு அவர் நிர்வாண நிலையில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2021, 05:49 PM IST
  • அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நீச்சல் செய்ய போன பெண் காணாமல் போனார்.
  • 20 நாட்களுக்குப் பிறகு அவர் நிர்வாண நிலையில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டார்.
  • லிண்ட்சே கென்னடியின் தாயார் தனது மகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினரிடம் கூறினார்.
நீச்சலுக்கு போன பெண் மாயம்; 20 நாட்களுக்கு பின் கால்வாயிலிருந்து மீண்ட அதிசயம் title=

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கால்வாயில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

புளோரிடாவில் வசிக்கும் லிண்ட்சே கென்னடியை 20 நாட்களாக காணவில்லை.  அந்தப் பெண் 20 நாட்களாக காலவாய்க்குள்ளேயே அலைந்து திரிந்தார். எவ்வளவோ முயன்றும் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.அந்த பெண் மார்ச் 3 ம் தேதி கால்வாயில் நீச்சல் செய்ய சென்றார், ஆனால் சிறிது தூரம் நீந்திய பின்னர், ஒரு சுரங்கப்பாதைக் கதவைக் கண்டார். அதற்கு நுழைந்தபின் , அவரால், அங்கிருந்து வெளியே வர முடியவில்லை.

மார்ச் 23 அன்று ஒரு இடத்தில்  வெளிச்சம் தெரிந்தது. ஆனால் ஆனால், அந்த வெளிச்சம் பல அடி உயரத்தில் தெரிந்தது. அதன் வழியாக, ஒரு நபர் செல்வதைக் கண்ட பின், உதவும் படி பெரும் குரலெடுத்து அழைத்தார்.

சாலை வழியாக சென்ற நபர் பெண்ணின் குரலை கேட்டதும் ​​உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தை அடைந்து சுமார் 8 அடி ஆழமான காவாயில் இருந்து இந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண் நிர்வாண நிலையில் இருந்தார்.

ALSO READ | சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் உலக வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம்

லிண்ட்சே கென்னடியின் தாயார் தனது மகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக மருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டதாகவும் காவல் துறையினரிடம் கூறினார். மார்ச் 3 ம் தேதி பெண் காணாமல் போனதாக அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சுரங்கப்பாதைக்குள் சென்றதாக காவல்துறையின் கூறினர். ஆரம்ப விசாரணையில், கென்னடியை பலவந்தமாக அவரை கூட்டிச் சென்றதாக்வோ அல்லது அவர் துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும், அவர் தானாகவே தான்  சுரங்கப்பாதைக்குள் சென்றார் என்றும் கூறினார்.

அந்த பெண் 20 நாட்கள் கால்வாயின் உள்ளேயே அலைந்து திரிந்ததாகவும் பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண் மிகவும் பலவீனமாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ | பங்களாதேஷில் இந்து கிராமம் மீது கொலைவெறி தாக்குதல்; தப்பிக்க ஊரை விட்டு ஓடிய மக்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News