ஜியோ-வை மிஞ்சும் ஏர்டெல்-ன் ரூ.49 திட்டம்!!

பிரபல டெலிகாம் நிறுவனமான Airtel தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது! 

Last Updated : Apr 24, 2018, 03:51 PM IST
ஜியோ-வை மிஞ்சும் ஏர்டெல்-ன் ரூ.49 திட்டம்!! title=

டெலிகாம் நிறுவனகள் தங்களின் ஒவ்வொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள நிறைய அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதிலும், ரிலையன்ஸ் ஜியோ-வை மிஞ்சும் வகையில் ஏர்டெல் நிறுவனம் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. 

இதை தொடர்ந்து தற்போது, ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் அதிகபடியான டேட்டா-வை வழங்கும் வகையில் சில சலுகை திட்டங்களை வழங்கி உள்ளது..!  ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 49 ரூபாய்க்கு புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 3ஜிபி தரவை வழங்குகிறது.! 

ரூ.49/- திட்டத்தின் நன்மை..! 

4-ஜி வேகத்திலான 3-ஜிபி தரவை தருகிறது. 

இந்த திட்டம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மற்றவர்களுக்கு இந்த 49 ரூபாய் திட்டம் 4-ஜி வேகத்திலான 1-ஜிபி தரவை மட்டுமே தரும்.

இந்த திட்டத்தை பெற விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 'மைஏர்டெல்' செயலியை பயன்பாடுத்தி அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீ-சார்ஜ் செய்து கொள்ளவும்.

ஜியோ-வின் ரூ.49/- திட்டத்தின் நன்மை..! 

4-ஜி வேகத்திலான 1-ஜிபி தரவை மட்டுமே 28 நாட்களுக்கு தருகிறது. ஜியோ-வை மிஞ்சும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம்...! 

Trending News