அரசு பள்ளியில் குடிபோதையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே பள்ளியில் குடிபோதையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Last Updated : Apr 7, 2018, 11:29 AM IST
அரசு பள்ளியில் குடிபோதையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்! title=

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே பள்ளியில் குடிபோதையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் ரஜினிகாந்த் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் 1மணியளவில் பள்ளி நேரத்தில் வெளியே சென்று விட்டு மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். இதனை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் உடற்கல்வி ஆசிரியரான ரஜினிகாந்
என்பவர்  மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு கிடந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்தை சஸ்பெண்ட் செய்து முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவ-மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பில்லாமல் மது அருந்திவிட்டு வந்தது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Trending News