ஆபாச படம் காட்டி மனைவியை டார்ச்சர் செய்த கணவர் மீது பரபரப்பு புகார்!!

ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கணவர் தன்னை டார்ச்சர் செய்வதாக கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Last Updated : Apr 7, 2018, 05:57 PM IST
ஆபாச படம் காட்டி மனைவியை டார்ச்சர் செய்த கணவர் மீது பரபரப்பு புகார்!! title=

ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கணவர் தன்னை டார்ச்சர் செய்வதாக கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ் என்பவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் தற்போது ராமநகரா மாவட்டத்தில் உள்ள  மாரியப்பனபாளையாவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்நிலையில் கந்தராஜின் மனைவி சமீபத்தில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது....!

தன்னுடைய கணவர் தன்னை அடிக்கடி ஆபாச நடிகை போல் இருப்பதாக டார்ச்சர் செய்து வருகிறார்.

அதோடு, தனது கணவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார். 

மேலும் தன்னை அடிக்கடி ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமைப்படுத்துவதகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விரைவில் இது தொடர்பாக  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Trending News