7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் LTC விதிகளில் மாற்றம், உடனே தெரிந்துகொள்ளுங்கள்

7th Pay Commission: விடுப்பு பயணச் சலுகை அரசாங்கக் கணக்கில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை திருத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2023, 11:06 AM IST
  • 7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு.
  • விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.
  • அனைத்து பிரச்னைகளையும் போக்கவும், அரசு ஊழியர்களின் வசதிக்காகவும் அரசு விதிகளை மாற்றியுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் LTC விதிகளில் மாற்றம், உடனே தெரிந்துகொள்ளுங்கள் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அரசு ஊழியர்களின் விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. விடுப்பு பயணச் சலுகை (Leave Travel Concession-LTC) அரசாங்கக் கணக்கில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை திருத்தியுள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு குறிப்பாணையில், இன்னும் கிளெயிம் தொகை கிடைக்காத நபர்களுக்கும், ஆகஸ்ட் 29, 2022 வரை பயண முகவர் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாதவர்களுக்கும் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாதாக DoPT தெரிவித்துள்ளது. அனைத்து பிரச்னைகளையும் போக்கவும், அரசு ஊழியர்களின் வசதிக்காகவும் அரசு விதிகளை மாற்றியுள்ளது.

M/s Balmer Lawrie & Company Limited (BLCL), M/s Ashok Travels & Tours (ATT) மற்றும் Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) ஆகிய மூன்று பதிவு செய்யப்பட்ட பயண முகவர்கள் விமான விவரங்களை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது. லீவு டிக்கெட் சலுகைக்கு, குறிப்பிட்ட நேர இடைவெளியில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​மலிவான கட்டணம் மற்றும் விமான கட்டணம் மலிவான கட்டணத்தை விட 10% அதிகமாக இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, பதிவு செய்யப்பட்ட பயண முகவர்களின் இணையதளத்தில் ஒரு ஊழியர் (Central Government Employees) எல்டிசியின் நோக்கத்திற்காக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், வழிகாட்டுதலின்படி தனிப்பட்ட அரசு ஊழியர் முன்பதிவு செய்த டிக்கெட்தான் மலிவான கட்டணமாக கருதப்படும். இருப்பினும், அனைத்து முகவர்களும் LTC பயணத்திற்காக LTC எழுதப்பட்ட டிக்கெட்டுகளை வழங்குவார்கள்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும்: வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ, குஷியில் கஸ்டமர்ஸ்

சிறப்பு சலுகைத் திட்டத்தின் கீழ், தகுதியற்ற அரசு ஊழியர்கள் தங்கள் தலைமையகத்தில் இருந்து என்சிஆர், ஜம்மு-காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லடாக் ஆகிய இடங்களில் உள்ள பயண இடத்திற்கு நேரடியாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில், அரசு ஊழியர் ப்ரிண்ட் எடுக்க வேண்டும். இருப்பினும், ஊழியர்கள் அதே டைம் ஸ்லாட்டில்தான் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஒரே ஸ்லாட்டில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால், அடுத்த ஸ்லாட்டில் கிடைக்கும் விமானங்களின் விவரங்களின் பிரிண்ட் அவுட்டை க்ளெயிம்களை கோரும் போது சமர்ப்பிக்கலாம். இதை வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி செய்ய வேண்டும்.  உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்குகள் இல்லாத ஊழியர்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு மூன்று ATA -களுக்கும் வழிகாட்டுதல்களில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. 2023 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து ஜூலை 2023 -இலும் அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைபப்டி 42% -லிருந்து 46% ஆக அதிகரித்துள்ளது. நவம்பரில் அதிகரித்த அகவிலைப்படியும் ஜூலை மாதம் முதலான 3 மாத அரியர் தொகையும் சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இனி அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு 2024 இல் இருக்கும். இருப்பினும், அடுத்த முறை டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.

மேலும் படிக்க | பென்ஷன் பற்றி இனி நோ டென்ஷன்: மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்.. அசத்தும் NPS

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News