7th Pay Commission: 4% DA உயர்வு, 18 மாத நிலுவைத் தொகை விரைவில்?

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 30, 2022, 06:20 AM IST
  • (டிஏ) உயர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றனர்.
  • ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறுகிறது.
  • டிஏ சதவீதம் 34 இல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
7th Pay Commission: 4% DA உயர்வு, 18 மாத நிலுவைத் தொகை விரைவில்? title=

அரசாங்கமானது மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத நிலுவை ஊதியம் தொடர்பான அறிவிப்பை எந்த தினத்தில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கும் என்றும் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்கான முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றனர்.  அதே சமயம் இதுவரை அகவிலைப்படி உயர்வு குறித்து எவ்வித அதிகாரபூர்வமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறுகிறது.  

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு 

ஆனால் வெளியான சில தகவல்களின்படி ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் 34 இல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது எந்த காரணத்திற்காக 4 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் கீழ் டிஏ உயர்வு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இந்த உயர்வின்படி, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்திற்கு ஆண்டுக்கு ரூ.8,640 உயரும் என்று எதிர்பார்க்கலாம்.  ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்திற்கு, மத்திய அரசு ஊழியர் 34 சதவீதத்தின் அடிப்படையில் தற்போது மாதத்துக்கு ரூ.6120 பெறுகிறார்.  புதிய எண்ணிக்கையுடன் இந்த தொகை மாதம் ரூ.6,840 ஆக இருக்கும், அதாவது மாதாந்திர டிஏ அதிகரிப்பு ரூ.720, அதாவது ஆண்டுக்கு ரூ.8,640 ஆக இருக்கும்.  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது.  டிஏ மற்றும் டிஆர் திருத்தங்கள் பெரும்பாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த முக்கிய அப்டேட், விரைவில் சம்பள உயர்வு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News