வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி?

DigiLocker சேவைகளைப் பயன்படுத்தி WhatsApp வழியாக உங்கள் ஆதார் மற்றும் PAN கார்டை நீங்கள் பெற முடியும்  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2023, 06:11 PM IST
  • வாட்ஸ்அப் வழியாக ஆதார் பெறலாம்
  • மத்திய அரசின் ஈஸியான சேவை
  • வாட்ஸ்அப்பில் பான் கார்டு பெறவது எப்படி?
வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி? title=

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு அனைத்து அரசு சேவைகளுக்கு மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால், அவற்றை பெறும் நடைமுறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு. முன்பெல்லாம் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பெறுவது மிக கடினமாக இருந்தது. ஆனால் அனைத்து அரசு சேவைகளுக்கும் தேவைப்படும் ஆவணமாக இவை மாறிவிட்டதால், இணைய வழியில் மிக எளிதாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் பெறுவதை உறுதிபடுத்தியிருக்கிறது மத்தியஅரசு.

இப்போது வாட்ஸ் அப் வழியாகவும் உங்களின் ஆதார் மற்றும் பான் கார்டை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதனை வாட்ஸ்அப் வழியாக பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்

* உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் ஓபன் செய்யவும்

* MyGov ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்ள, +91 9013151515-க்கு ‘ஹாய்’ என அனுப்பவும்.

* DigiLocker அல்லது CoWIN சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சாட்பாட் உங்களைக் கேட்கும். டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்களிடம் DigiLocker கணக்கு இருக்க வேண்டும். 

* உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

* உங்கள் DigiLocker கணக்குடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை chatbot இப்போது காண்பிக்கும்.

* உங்கள் ஆதார் அல்லது பான் கார்டுக்கு அருகில் காட்டப்படும் விருப்ப எண்ணை உள்ளிடவும்.

* ஆவணம் இப்போது சாட்பாக்ஸில் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

 

மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!

மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News