ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! சம்பளத்தை இனி முன்கூட்டியே பெற்று கொள்ளலாம்!

Advance Salary Scheme:ஊழியர்களுக்கான முன்கூட்டிய சம்பளத் திட்டம் ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. பட்ஜெட்டின் போது ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இதை அறிவித்தார்.   

Written by - RK Spark | Last Updated : Jun 3, 2023, 11:55 AM IST
  • ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் திட்டம்
  • 100 யூனிட் மிசாரம் இலவசம்
  • 200 யூனிட் வரை நிலையான கட்டணம்
ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! சம்பளத்தை இனி முன்கூட்டியே பெற்று கொள்ளலாம்! title=

Advance Salary Scheme:ஊழியர்களுக்கான முன்கூட்டிய சம்பளத் திட்டம் ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. பட்ஜெட்டின் போது ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இதை அறிவித்தார். அசோக் கெலாட் ஏற்கனவே மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. நீங்கலே ராஜஸ்தான் அரசாங்கத்தின் ஊழியராக இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ராஜஸ்தானில் அரசு ஊழியராக இருந்தாலோ, இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ராஜஸ்தானில், அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்பணமாக செலுத்த. 'Earned salary advance drawal access scheme' க்கு முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.  ராஜஸ்தான் ஃபைனான்சியல் சர்வீஸ் டெலிவரி லிமிடெட் ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த புதிய திட்டத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகும். இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. அசோக் கெலாட் ஏற்கனவே மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளார். இதையடுத்து, ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அரசு ஊழியர்களுக்காக மற்றொரு முக்கியமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission 46% டிஏ ஹைக் உறுதி: வந்தது அதிரடியான அப்டேட்!!

பட்ஜெட்டின் போது முதல்வர் அறிவித்தார்

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மகத்தான திட்டத்தின் கீழ், மாத இறுதிக்குள் ஊழியர்களுக்கு விகிதாசாரப்படி முன்கூட்டிய சம்பளம் வழங்கப்படும். ஊழியருக்கு வழங்கப்படும் முன்கூட்டிய சம்பளம் அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதை பட்ஜெட்டின் போது முதல்வர் கெலாட் அறிவித்தார். இத்திட்டதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் மாநிலத்தில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் கெலாட் அறிவித்திருந்தார். கெலாட் தனது ட்விட்டரில், 'மாதம் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் மாநிலத்தின் குடும்பங்களின் மின் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கும். 100 யூனிட்டுகளுக்கு மேல் செலவு செய்யும் குடும்பங்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அதாவது ஒரு மாதத்தில் 300 யூனிட் செலவழித்தால் 200 யூனிடுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.  மேலும்,200 யூனிட்கள் வரை நிலையான கட்டணம், எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வாடிக்கையாளர் செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் கெலாட் கூறினார். இவை அனைத்தும் மாநில அரசால் செலுத்தப்படும்.

மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் மேட்ரிக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி, தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் விகிதம் 42% ஆக உள்ளது. அடுத்த திருத்தத்தில் இது 46% ஆக அதிகரிக்கக்கூடும். ஏப்ரல் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து இது மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரித்தால், மொத டிஏ 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அதன் பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். ஏப்ரல், 2023க்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index for Industrial Workers-CPI-IW) 0.9 புள்ளிகள் அதிகரித்து 134.2 ஆக உயர்ந்துள்ளது. 1 மாத சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.68 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News