India 2021: 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த SUV கார்கள்

இந்தியாவில்  8 லட்சம் ரூபாய்ற்கும் குறைவான சிறந்த கார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கார்கள் எவை தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2021, 09:20 AM IST
  • SUV பட்டியலில் சிறந்த கார்கள்
  • 8 லட்ச ரூபாய்க்கு குறைவான கார்கள்
  • பல்வேறு மாடல்களில் கிடைக்கும்
India 2021: 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த SUV கார்கள் title=

புதுடெல்லி: காரை வாங்க விரும்புபவர்கள், முதலில் அவர்களது பட்ஜெட்டை சரிபார்க்க வேண்டும். இந்தியாவில்  8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சிறந்த கார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கார்கள் இவை எந்த காரை வாங்குவது என்பதை தீர்மானிக்க உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.  

ஹூண்டாய் வெனு
எட்டு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி வென்யூ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 6,99,200 ரூபாயாகும்.  1.2L கப்பா பெட்ரோல், 1.0L கப்பா டர்போ GDI பெட்ரோல் மற்றும் 1.5L U2 CRDi டீசல் இன்ஜின் வகைகள் இந்த மாடலில் உண்டு.

car

ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய்  ஹேட்ச்பேக் ஹூண்டாய் ஐ20 காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6,91,200.   1.2L கப்பா பெட்ரோல், 1.0L கப்பா டர்போ GDI பெட்ரோல் மற்றும் 1.5L U2 CRDi டீசல் இன்ஜின் வகைகள் இந்த மாடலில் உண்டு.

i20

மஹிந்திரா XUV300
மஹிந்திராவின் மிகவும் சக்திவாய்ந்த காம்பாக்ட் SUV மஹிந்திரா XUV300 ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக இருக்கும். புனேவில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.7.96 லட்சம் ஆகும்.  இந்த கார் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

mahindra

வோக்ஸ்வாகன் போலோ

இந்த பட்ஜெட்டில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) ஒரு நல்ல தெரிவாக இருக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ.6.32 லட்சம். இதில் 1.0L MPI இன்ஜின் உள்ளது.

suv

 டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவியான டாடா நெக்ஸான் (Tata Nexon) இந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த தேர்வாகும். இதுவே இந்தியாவின் முதல் பாதுகாப்பான 5 நட்சத்திர ரேட்டிங் கார் ஆகும். டெல்லியில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.29 லட்சம்.

tata

READ ALSO | IRCTC தனது முதல் Pod ஹோட்டலை மும்பையில் திறந்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News