BHIM SBI Pay: இனி வெளிநாட்டுக்கு எளிமையாக பணம் அனுப்பலாம்... இதோ முழு விவரம்!

BHIM SBI Pay: பாரத ஸ்டேட் வங்கியின் BHIM SBI Pay செயலி புதிதாக வந்துள்ள நிலையில், அதை பயன்பாடு குறித்தும், அவர் எவ்வாறு பயன்படுவது குறித்தும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2023, 03:08 PM IST
  • சிங்கப்பூர் பே நவ் மூலம் இந்திய UPI இணைக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம், எளிமையாக பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும்.
BHIM SBI Pay: இனி வெளிநாட்டுக்கு எளிமையாக பணம் அனுப்பலாம்... இதோ முழு விவரம்! title=

இந்தியாவின் UPI, சிங்கப்பூர் பே நவ் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை மூலம் இரு நாட்டு குடிமக்களும் நிதி, பணம் அனுப்புதல், பணம் செலுத்துதல் ஆகியவற்றை இனி விரைவாகவும் உடனடியாகவும் மாற்ற அனுமதிக்கிறது. வங்கி விவரங்கள் உள்ளிட்ட பலவற்றைப் பூர்த்தி செய்யத் தேவையில்லை. இருநாட்டினரும், வெளிநாட்டுப் பணம் அனுப்பும் வசதி பெறுவார்கள்.

இருநாடுகளிலும் உள்ள பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்களின் முக்கிய பிரச்னை என்னவென்றால், பணத்தை எவ்வாறு அனுப்புவது என்பதுதான். இந்த Bhim SBI Pay செயலியை பயன்படுத்தி UPI மூலம் சிங்கப்பூரில் இருந்து பணத்தை அனுப்ப அல்லது பெறுவதற்கு பாரத ஸ்டேட் வங்கி அனுமதிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் UPI செயலியான Bhim SBI Pay, UPI-இல் இருக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பவும், பணத்தைப் பெறவும், ஆன்லைன் பில் பேமெண்ட்டுகள், ரீசார்ஜ்கள், ஷாப்பிங் போன்றவற்றை தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளவும் முடியும்.

இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் என்ன?

- UPI செயலியை பயன்படுத்தி சிங்கப்பூருக்கு உடனடியாகப் பணத்தை அனுப்பலாம்.

- UPI செயலியை பயன்படுத்தி சிங்கப்பூரில் இருந்து பயனர்கள் உடனடியாகப் பணத்தைப் பெறலாம்.

- பணம் அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்கு ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பு 1000 சிங்கப்பூர் டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் 82, 644.10

- இது அன்றைய சிங்கப்பூர் டாலர் - இந்திய ரூபாய் மாற்று விகிதக் கணக்கீட்டைப் பொறுத்து இருக்கும்.

மேலும் படிக்க | Bank Nifty: நிஃப்டி50, நிஃப்டி வங்கியில் Paytm டிரெண்டிங்

செயலியை எப்படி பயன்படுத்துவது?

- கூகுள் ப்ளே ஸ்டோர்/ ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் செல்லவும்.

- Bhim SBI Pay செயலியின் லேட்டஸ்ட் பதிப்பைப் பதிவிறக்கவும்.

- செயலியை இன்ஸ்டால் செய்து பதிவு செய்வதற்கான செயல்முறைகளை முடிக்கவும்.

- உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

- ஒரு வாடிக்கையாளர் தனது மொபைலில் BHIM SBI Pay-ஐ பதிவிறக்கிய பிறகு அதில் பதிவுசெய்து, UPIஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புவதற்காக அவரது கணக்குகளை இணைக்க வேண்டும். 

VPA ஐடியை எவ்வாறு உருவாக்குவது?

"மெய்நிகர் கட்டண முகவரி" (VPA- Virtual Payment Address) என்பது தனித்துவமான ஒரு மெய்நிகர் ஐடி. எடுத்துக்காட்டாக, பெயர் அல்லது எண் அல்லது எண்ணெழுத்துகளின் கலவையைத் தொடர்ந்து @sbi, அதாவது ramesh@sbi அல்லது 7051448888@sbi போன்றவற்றை நீங்களே தேர்வு செய்யலாம்.

உங்கள் கணக்கு VPA உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்வதற்குப் பதிலாக, உங்கள் VPA-ஐ மட்டும் பயன்படுத்தி பணத்தைச் செலுத்தலாம்/பெறலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News