How To Start Low Cost Business: நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா நெருக்கடியால் பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர். பலருக்கு தொழிலிலும் அதிக அளவு நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய நேரத்திலும், நீங்கள் பணம் சம்பாதிக்க ஒவ்வொரு வீட்டிலும் தேவைப்படும் பொருட்களுக்கான ஒரு தொழிலைத் தொடங்கலாம்.
இதுபோன்ற ஒரு வணிகத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். 1.14 லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் அதிக லாபம் ஈட்ட முடியும். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த வணிகத்தில் அரசாங்கமும் உங்களுக்கு உதவும்.
அரசு கடன் வசதியை வழங்குகிறது
நீங்கள் பணம் ஈட்டுவதற்கான வழிகளைத் தேடுகிறீர்கள் என்றால், மெடலால் உருவாக்கப்படும் கட்லரிகள், அதாவது உணவு உண்ண தேவைப்படும் ஸ்பூன்கள், கரண்டிகள், சிறு கரண்டிகள், கத்திகள் போன்றவற்றை தயாரிக்கும் அலகைத் தொடங்கலாம். கட்லரி வணிகத்திற்கு, அரசாங்கத்தின் முத்ரா திட்டத்தின் (Mudra Scheme) கீழ் கடன்களும் கிடைக்கின்றன.
இவற்றைப் போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்
அனைத்து வீடுகளிலும் கட்லரிக்களுக்கான தேவை உள்ளது. எனவே நீங்கள் இந்தத் தொழிலைத் தொடங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம். இந்த வணிகத்தின் கீழ், நீங்கள் கட்லரிகள், கைக் கருவிகள் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சில முக்கியமான கருவிகளையும் செய்யலாம். இது தவிர, வீடுகளில் இதுபோன்ற கட்லரிகளுக்கு அதிக தேவை உள்ளது.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்
அலகு அமைக்கும் செலவு: 1.8 லட்சம் ரூபாய். இதில் வெல்டிங் செட், பஃபிங் மோட்டார்கள், துளையிடும் இயந்திரங்கள், பெஞ்ச் கிரைண்டர்கள், ஹேண்ட் ட்ரில்லிங், ஹேண்ட் கிரைண்டர், பெஞ்ச், பேனல் போர்டுகள் மற்றும் பிற கருவிகளையும் வாங்கி விடலாம். மூலப்பொருட்களுக்கான செலவு: 1,20,000 ரூபாய் (2 மாதங்களுக்கு மூலப்பொருள்) ஆகும். இது தவிர, பணியாளர்களின் சம்பளம் மற்றும் பிற செலவுகள்: மாதத்திற்கு 30 ஆயிரம். மொத்த செலவு: சுமார் 3.3 லட்சம் ரூபாய் ஆகும்.
நீங்கள் 1.14 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும்
இதில், தொழில் துவங்கும் நபர் 1.14 லட்சம் ரூபாய் மட்டும் செலவு செய்தால் போதும். மீதமுள்ள செலவுகளுக்கு நீங்கள் அரசாங்கத்தின் உதவியைப் பெறலாம். முத்ரா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் கடன்கள் வழங்கப்படுகின்றன.
எப்படி விண்ணப்பிப்பது
இதற்கு, பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ், நீங்கள் எந்த வங்கியிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் பெயர், முகவரி, வணிக முகவரி, கல்வி, தற்போதைய வருமானம் மற்றும் எவ்வளவு கடன் தேவைப்படுகிறது போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
தொழில் துவங்குவதற்கு முன்னர் அனைவர் மனதிலும் சங்கோஜம் இருப்பது நியாயம்தான். ஆனால், அந்த தயக்கங்களையும் தேவையற்ற அச்சத்தையும் நீக்கிவிட்டு சொந்தக் காலில் நிற்க முற்பட்டால், முன்னேற்றத்தின் முகமாக நாம் மாறலாம். வாசலில் நிற்கும் வெற்றி, வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும்.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR