விமான பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் டிக்கெட் தொகை குறையக்கூடும்!!

Cheap Air Tickets:  மலிவான விமான டிக்கெட் வாங்கணுமா? நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 31, 2022-க்குப் பிறகு, மலிவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் பெறக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 04:18 PM IST
  • வரும் நாட்களில் விமான பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதா?
  • மலிவான விமான கட்டணம் பெற ஆசையா?
  • நாளை முதல் அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
விமான பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் டிக்கெட் தொகை குறையக்கூடும்!! title=

மலிவான விமான டிக்கெட்டுகள்: வரும் நாட்களில் விமான பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதா? மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்க ஆசை உள்ளதா? அப்படி இருந்தால், இது உங்களுக்கான செய்தியாக இருக்கும். நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 31, 2022-க்குப் பிறகு, மலிவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் பெறக்கூடும். உள்நாட்டு விமானப் பயணத்தின் (இந்தியன் ஏர்லைன்ஸ்) கட்டணத்தில் விதிக்கப்பட்ட விலை உச்சவரம்பு நாளை நீக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

நிறுவனங்கள் மலிவான சலுகைகளைக் கொண்டு வரக்கூடும்

ஊடக அறிக்கைகளின்படி, விமானக் கட்டணங்களின் விலை உச்சவரம்பு நீக்கப்பட்ட பிறகு, உள்நாட்டு விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விமானச் சலுகைகளைக் கொண்டு வரக்கூடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நிலைமை படிப்படியாக முன்னேறி வருகிறது.

மேலும் படிக்க | மக்கள் ஹேப்பி..பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு 

Cheap Air Tickets: Air Travel May Get Cheaper from Tomorrow

27 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த தகவலின்படி, சந்தை நிலவரங்களை பார்த்து, உள்நாட்டு விமான கட்டணங்களில் உள்ள கட்டண வரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை கடந்த 27 மாதங்களாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று அதை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானப் பயணம் மலிவானதாகுமா?

பண்டிகைக் காலம் தொடங்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நிறுவனங்கள் மலிவான விமானப் பயணத்தை வழங்கக்கூடும். வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் மலிவான விமான டிக்கெட்டுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக விதிக்கப்பட்ட விலை வரம்பு காரணமாக, நிறுவனங்களால் டிக்கெட் விலையை பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உள்நாட்டு விமான பயணிகளுக்கு மிக நல்ல செய்தியாக வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர், விமான கட்டணங்கள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் இவற்றில் ஏற்றம் காணப்பட்டன. இப்போது விமான கட்டணங்கள் மீண்டும் குறைந்தால், அது பொது மக்களுக்கு மிக நல்ல மற்றும் லாபகரமான விஷயமாக இருக்கும். 

மேலும் படிக்க | Zoop service: ரயிலில் நேரடியாக உணவு விநியோகம் செய்யும் ஜூப் சர்வீஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News