Car Price Hike: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய கார்களின் விலை உயர்கிறது

நான்கு சக்கர வாகன வாகனத்தின் கட்டணமானது 10 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல், இரு சக்கர வாகனத்தின் விலையும் அதிகரிக்கிறது. விலை உயர்வதை அடுத்து, புதிய வாகனத்தின் காப்பீட்டு செலவு 5 ஆண்டுகளுக்கு கணிசமாக அதிகரிக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 10:11 AM IST
  • செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கார்களின் விலை உயர்கிறது
  • வாகன காப்பீடு கட்டணங்களும் அதிகரிக்கிறது
  • இரு சக்கர வாகனத்தின் விலையும் அதிகரிக்கிறது
Car Price Hike: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய கார்களின் விலை உயர்கிறது title=

புதுடெல்லி: புதிய வாகனத்திற்கான காப்பீட்டு செலவு கணிசமாக அதிகரிக்கும்.  இன்னும் ஓரிரு தினங்களில் புதிய கார்களின் விலை கணிசமாக உயர்கிறது. அதிலும்  கொரோனா காலத்தில் மக்களின் வேலை மற்றும் பொருளாதார சூழலில் சுணக்கம் இருக்கும் வேளையில், இனிமேல் கார் வாங்குவது என்பது மேலும் பணம் செலுத்தும்போது அதிக தொகை செலுத்த வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய முடிவுக்குப் பிறகு, புதிய வாகனங்கள் வாங்கிய பிறகு 5 வருடங்களுக்கு பம்பர் -பம்பர் காப்பீடு அவசியம். அதாவது, நீங்கள் காப்பீட்டின் சொந்த சேத பாலிசியையும் (insurance's own damage policy) எடுக்க வேண்டும்.

புதிய காரை வாங்குவது அடுத்த மாதம் தேதியிலிருந்து அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விலை உயர்ந்ததாக இருக்கும். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. நான்கு சக்கர வாகன வாகனத்தின் கட்டணமானது 10 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல், இரு சக்கர வாகனத்தின் விலையும் அதிகரிக்கிறது. விலை உயர்வதை அடுத்து, புதிய வாகனத்தின் காப்பீட்டு செலவு 5 ஆண்டுகளுக்கு கணிசமாக அதிகரிக்கும்.

Also Read | தனி ஆர்டிஓ பதிவு செய்யாமலேயே இந்தியா முழுவதும் பயணிக்கலாம்

தற்போதுள்ள விதிகளின்படி, புதிய வாகனத்தில் மூன்றாம் நபர் காப்பீடு நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 வருடங்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 2 வருடங்களுக்கும் அவசியம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தீர்ப்புக்குப் பிறகு, புதிய வாகனங்களை வாங்கிய பிறகு 5 வருடங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு அவசியம். அதாவது, காப்பீட்டின் சொந்த சேத பாலிசியையும் (insurance's own damage policy) எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

இவற்றைத் தவிர, மற்றுமொரு விஷயமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை தனிப்பட்ட விபத்து காப்பீடு பாதுகாப்பு என்பது ஓட்டுநருக்கு மட்டுமே தேவைப்பட்டது, ஆனால் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதையும் மாற்றிவிட்டது. 

வாகனத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 5 ஆண்டுகள் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு அவசியம். அதாவது, புதிய வாகனத்தின் மொத்த விலையில் இனி கணிசமான அதிகரிப்பு இருக்கும்.  ஒவ்வொரு வருடமும் காப்பீட்டு செலவு 20%அதிகரிக்கும். ஒரு காரின் விலை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும்.

Also Read | Simple One Electric Scooter: நம்ப முடியாத வரம்பு, ரூ.60,000 வரை மானியம், சூப்பர் அம்சங்கள்

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாகனச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் விலை உயர்வு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation Of Automobile Dealers Associations) கவலை தெரிவித்துள்ளது.

புதிய காப்பீட்டு கொள்கையால் இருசக்கர வாகனங்கள் விலை ஐந்தாயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை உயரும். இதேபோல் ஆல்டோ அல்லது க்விட் போன்ற ஆரம்ப நிலை கார்களின் விலை சுமார் 50 ஆயிரம் வரையிலும், சற்று உயர் நிலை மாடல்களான க்ரெட்டா போன்ற வாகனங்களின் விலை 2 லட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்கும் என கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

இது கார் நிறுவனங்களின் கவலையை மட்டுமல்ல, கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க திட்டமிடும் மக்களுக்கும் பெருத்தக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read | Vehicle Registration: வாகனங்களின் டிரான்ஸ்பர் எளிதானது, இனி புதிய முறையில் பதிவு இருக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News