இந்தியா விவசாயத் தொழிலை அடிப்படையாக கொண்ட நாடு. வசதிகளும், வாய்ப்புகளும் நகரங்களில் தான் இருக்கும் என்பது பொதுவான எண்ணம். இந்த எண்ணத்தை புரட்டிப் போடுகிறது இந்தியாவின் ஒரு கிராமம்.
இந்த கிராமத்தில் 17 வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் தொகை இருக்கிறது. சுமார் 7,600 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமம் செல்வ செழிப்பில் திளைக்கிறது.
இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமலல், அதிநவீன வசதிகள் அனைத்துமே உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் தவிர, கிராமத்தில் ஒரு அதிநவீன கெளசாலா எனப்படும் பசு பராமாரிப்பு மையமும் உள்ளது.
Also Read | செப்டம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டம்
கோவில்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. கிராமத்தில் இருக்கும் சுகாதார மையமும் உலகத் தரத்தில் உள்ளது.
அதுமட்டுமா? இங்கு புதிய ஏரிகள், தடுப்பணைகள் மற்றும் ஆழமான ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இந்த இந்திய கிராமத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது.
இத்தனை வசதிகளையும் கேட்டால், கண்டிப்பாக இப்படி ஒரு கிராமம் இந்தியாவில் இருக்காது என்று முடிவுக்கு வந்துவிட வேண்டாம். இது கற்பனை அல்ல, நிதர்சனமான நிஜ கிராமம் தான். அதுவும் இந்தியாவில் தான் உள்ளது.
Also Read | விண்வெளிக்கு பயணம் செல்ல ஆசையா? டிக்கெட் விலை என்ன தெரியுமா?
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பாலானவர்க வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஆனால், தங்கள் நாட்டில், கிராமத்திலேயே தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புவதால் தான் இங்கு 5,000 கோடிக்கு மேல் வைப்புத் தொகை உள்ளது. சிறிய கிராமத்தில் 17 வங்கிகள் முளைத்திருப்பதற்கான காரணமும் இதுவே…
வங்கி வைப்புத்தொகையில் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்று இந்த இந்திய கிராமம். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாப்பர் (Madhapar) என்ற கிராமம் தான் அது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் உலகின் பல பகுதிகளில் வசிக்கிறார்கள்.
இப்பகுதியில் விவசாயம் செழித்து வளர்கிறது. இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான விவசாய பொருட்கள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த அதிசய கிராமத்தின் மண்ணின் மைந்தர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், 5,000 கோடிக்கு மேல் வைப்புத்தொகையை தங்கள் கிராமத்தில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளனர்.
Also Read | Super Offer by Indigo: 915 ரூபாயில் விமானப் பயணம்! இண்டிகோவின் சூப்பர் சலுகை..!
மதாப்பர் கிராம சங்கம் (Madhapar Village Association) என்ற அமைப்பு 1968 இல் லண்டனில் உருவாக்கப்பட்டது. இந்த கிராம மக்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்காக ஒருஅலுவலகம் திறக்கப்பட்டது. லண்டனில் இருப்பதைப் போலவே மதாப்பர் கிராமத்திலும் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது,
இதனால், லண்டனில் இருந்து கிராமத்திற்கு மக்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். எனவே, இங்கிலாந்தில் வசித்தாலும், தங்கள் கிராமத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்க உதவுவதாக மக்கள் கூறுகின்றனர்.
அதோடு, தங்கள் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இந்த மக்கள் மதாப்பர் கிராம சங்கத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
Also Read | தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR