ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் overdraft facility-ல் இத்தனை நன்மைகள் உள்ளதா

ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. 

Last Updated : Dec 1, 2020, 09:12 PM IST
  • ஓவர்டிராஃப்ட் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
  • வாடிக்கையாளர் தனது சம்பளக் கணக்கில் ஓவர் டராஃப்ட் எடுக்கலாம்.
  • காப்பீட்டுக் கொள்கையை செக்யூரிடியாக வைத்து ஓவர்டிராப்ட் எடுக்கலாம்.
ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் overdraft facility-ல் இத்தனை நன்மைகள் உள்ளதா title=

புதுடெல்லி: திடீரென்று உங்களுக்கு பணம் தேவைப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பணம் கேட்பீர்கள், அல்லது அலுவலகம் அல்லது வங்கியில் கடன் வாங்குவீர்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்களா அல்லது வங்கி உங்களுக்கு கடனை வழங்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நீங்கள் தனிப்பட்ட கடனை பெற்றாலும், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், ஓவர் டிராஃப்ட் (Overdraft) எனப்படும் வங்கி வசதி நமக்கு துணையாக வருகிறது. இது ஒரு அற்புதமான விஷயம், இதன் மூலம் உங்கள் கணக்கில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) இருக்கும்போது கூட உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். கொஞ்சம் வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையில், ஓவர் டிராஃப்ட் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் உங்கள் மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கு விடை கிடைக்கும். எப்படி விண்ணப்பிப்பது?

ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, நீங்கள் வங்கிக்கு செல்லலாம், அல்லது ஆன்லைனிலும் விண்ணபப்பிக்கலாம். இந்த வசதிக்காக பல வங்கிகள் 1% செயலாக்க கட்டணம் (Processing Fees) வரை வசூலிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களில் சிலருக்கு இந்த வசதியை தானாக வழங்குகின்றன. சில வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

எத்தனை வகையான ஓவர் டிராஃப்ட்கள் உள்ளன?

வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஓவர் டிராஃப்ட் வழங்கப்படுகிறது. இது ஒரு வகையான கடன் ஆகும். அதில் வங்கி வட்டியும் வசூலிக்கிறது. ஓவர் டிராஃப்ட் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது. இது வங்கியுடனான உங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தது.

1. சம்பளத்தின் மீது ஓவர்டிராஃப்ட்: வாடிக்கையாளர் தனது சம்பளக் கணக்கில் ஓவர் டராஃப்ட் எடுக்கலாம். பொதுவாக, சம்பளத்தின் 2-3 மடங்கு ஓவர் டிராஃப்ட் கிடைக்கும். அதாவது, உங்கள் சம்பளம் மாதம் ரூ .50,000 என்றால், நீங்கள் ரூ .1.5 லட்சம் வரை ஓவர்டிராப்ட் பெறலாம். சம்பளக் கணக்கைக் (Salary Account) கொண்ட அதே வங்கியில் இருந்து ஓவர்டிராப்ட் எடுக்கும்போதுதான் இந்த வசதியின் நன்மை கிடைக்கும். இதை ஒரு வகையில் குறுகிய கால கடன் என்றும் அழைக்கலாம்.

2. வீட்டிற்கான ஓவர்டிராஃப்ட்: வங்கிகள் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியையும் வழங்குகின்றன. சொத்தின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை ஓவர்டிராப்டின் மதிப்பு இருக்கலாம். உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) ஆகியவை ஓவர்டிராப்ட் அளிப்பதற்கு முன் மதிப்பிடப்படுகின்றன.

ALSO READ: பழைய செய்தி, புதிய பார்வை: Lakshmi Vilas Bank-க்கு நன்மையே நடந்துள்ளது

3. காப்பீட்டுக் கொள்கையில்: வாடிக்கையாளர்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கையை செக்யூரிடியாக வைத்து ஓவர்டிராப்ட் எடுக்கலாம். ஓவர்டிராப்டின் அளவு காப்பீட்டின் மதிப்பைப் பொறுத்தது

4. FD இல் ஓவர் டிராஃப்ட்: வாடிக்கையாளர் FD இன் மொத்த மதிப்பில் 75% வரை ஓவர்டிராஃப்ட் பெறலாம். இதில் வாடிக்கையாளரிடமிருந்தும் வங்கி குறைந்த வட்டியை பெறுகிறது. வங்கிகள் வழக்கமாக FD இல் கிடைக்கும் வட்டியை விட 2% அதிகமாக வசூலிக்கின்றன. எஃப்.டி மற்றும் காப்பீட்டுக் கொள்கையில் வட்டி எடுப்பது மிகவும் எளிதானது. ஏனென்றால் அதன் மதிப்பீடு உடனடியாக செய்யப்படுகிறது. ஆனால் வீட்டில் ஓவர் டராஃப்ட் எடுப்பது சற்று சிக்கலானது.  ஏனென்றால் அதற்கு அதிக நேரம் எடுக்கும்.

ALSO READ: SBI, RuPay, JCB இணைந்து அறிமுகப்படுத்தும் Contactless Debit Card: நன்மைகள் பல, விவரம் உள்ளே

ஓவர் டிராஃப்ட் எவ்வாறு செயல்படுகிறது?

உங்கள் வங்கி ஏற்கனவே உங்களுக்கு ஓவர்டிராஃப்ட் வசதியை வழங்கியிருந்தால், நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்கள் ஓவர்டிராஃப்ட் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அது தானாகவே ஓவர் டிராப்டுக்கு சென்றுவிடும். ஓவர்டிராப்டின் அளவு வாடிக்கையாளரைப் பொறுத்தது. அதன் பிறகு நீங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவது போல அதை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தும் வரை வங்கி தொடர்ந்து வட்டி வசூலிக்கும்.

நிலுவைத் தொகைக்கு வட்டி தினமும் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் கணக்கில் பணத்தைச் சேலுத்த செலுத்த ​​நிலுவைத் தொகை குறைகிறது. இதற்காகத்தான் தினசரி அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News